For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டீ ரொம்ப நல்லா இருந்துச்சு.. சேலம் அருகே தேனீர் கடையில் டீ குடித்து பாராட்டிய எடப்பாடியார்

சேலம் அருகே தேனீர் கடையில் டீ குடித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டீ நன்றாக இருந்ததாக பாராட்டினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம் அருகே தேனீர் கடையில் டீ குடித்து பாராட்டிய எடப்பாடியார்- வீடியோ

    சேலம்: தேனீர் கடையில் டீ குடித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டீ நன்றாக இருந்ததாக உரிமையாளரை பாராட்டினார்.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து வருகிறார்.

    இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கொங்கனாபுரம் ஊராட்சி ஒன்றியம் சமுத்திரம் என்ற குக்கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைத்தார்.

    டீ குடித்த முதல்வர்

    டீ குடித்த முதல்வர்

    இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ள அம்பாள் என்ற தேனீர் கடைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவாறு தேனீர் அருந்தினார்.

    காசுகொடுத்த முதல்வர்

    காசுகொடுத்த முதல்வர்

    இதைத்தொடர்ந்து அந்த தேனீர் கடை உரிமையாளரிடம், இந்த கிராமத்தில் தேனீர் வியாபாரம் எப்படி உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். தேனீர் அருந்திய பின்பு அதற்கான தொகையையும் முதல்வர் கடை உரிமையாளரிடம் கொடுத்தார்.

    உரிமையாளருக்கு பாராட்டு

    உரிமையாளருக்கு பாராட்டு

    தேனீர் நன்றாக இருந்ததாக தெரிவித்ததோடு அந்தக் கடை உரிமையாளரையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டினார். நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தேனீர் கடையில் முதல்வருடன் தேனீர் அருந்தினார்.

    எம்பி,எம்எல்ஏக்கள்

    இந்த நிகழ்வின் போது நாடாளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் உடனிருந்தனர். இந்த நிகழ்வு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Chief Minister Edappadi Palanisami taken Tea in Salem village tea shop. CM praised the tea shop owner that tea was good.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X