For Daily Alerts
ஜிம்மில் உடற்பயிற்சி செய்து அசத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து அசத்திய முதல்வர்-வீடியோ
சேலம்: எடப்பாடியில் ஜிம்மை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து அசத்தினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்தில் முதல்வர் உடற்பயிற்சி செய்து பார்த்தார். மேலும் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் இறகுப்பந்தும் விளையாடினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
முதல்வர் உடற்பயிற்சி செய்வது மற்றும் ஷெட்டில் கார்க் விளையாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.