For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்க்கட்சி தலைவர்ன்னா ஜெயலலிதா தான்.. ஸ்டாலினை விளாசிய முதல்வர் எடப்பாடியார்!

எதிர்க்கட்சி தலைவர் என்றாலும் அது ஜெயலலிதா தான் எனக் கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலினை வறுத்தெடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலினை விளாசிய முதல்வர் எடப்பாடியார்!-வீடியோ

    சென்னை: எதிர்க்கட்சி தலைவர் என்றாலும் அது ஜெயலலிதா தான் எனக் கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலினை வறுத்தெடுத்துள்ளார்.

    சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த திமுகவினர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டிடிவி தினகரன், விஜயதாரணி ஆகியோர் வெளிநடப்பு செய்த திமுகவினரை அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    வெளியேறினார்கள்

    வெளியேறினார்கள்

    அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதில், வெளிநடப்பு செய்த திமுகவினர் மீண்டும் வந்து ஜனநாயக கடமையாற்ற எந்த தடையும் இல்லை. திமுக உறுப்பினர் வெளியேற்றப்படவில்லை. தானாக வெளியேறினார்கள்.

    அரசாணை வெளியீடு

    அரசாணை வெளியீடு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்ததைதான் நாங்கள் கூறினோம். சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டது.

    உண்மையைதான் பேச வேண்டும்

    உண்மையைதான் பேச வேண்டும்

    மாதிரி சட்டசபையில் ஸ்டாலின் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் சட்டசபையில் உண்மையைதான் பேச வேண்டும்.

    திமுகவினருக்கு அச்சம்

    திமுகவினருக்கு அச்சம்

    பேசினால் உண்மை வெளிவந்துவிடுமோ என்ற அச்சம் திமுகவினருக்கு. அதனால் தான் சட்டசபையை புறக்கணித்துள்ளனர்.

    230 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

    230 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

    ஸ்டாலின் தொழில் துறை அமைச்சராக இருந்த போது, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்வதற்காக 230 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

    தன்னந்தனியாக ஜெயலலிதா

    தன்னந்தனியாக ஜெயலலிதா

    எதிர்க்கட்சி தலைவர் என்றாலும் அது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான். 2006 ஆம் ஆண்டு அனைத்து அதிமுக எம்எல்ஏக்களையும் வெளியேற்றிய போது தன்னந்தனியாக ஜனநாயக கடமையாற்றியவர் ஜெயலலிதா.

    ஸ்டாலினை சாடிய எடப்பாடியார்

    ஸ்டாலினை சாடிய எடப்பாடியார்

    67 துறை அமைச்சர்களின் குறுக்கீடுகளையும் எதிர்க்கொண்டு பேசியவர் ஜெயலலிதா. இவ்வாறு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சட்டசபையை புறக்கணித்ததை விமர்சித்துள்ளார்.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy praises Jayalalitha. He slams Stalin for boycotting assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X