For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'இடைத்தேர்தலுக்கு அவசியம் இருக்காது!' - ஏன் இப்படிச் சொன்னார் எடப்பாடி பழனிசாமி?

இடைத்தேர்தலுக்கு அவசியம் இருக்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவது குறித்து அக்கட்சியினர் விளக்கியுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இடைத்தேர்தலுக்கு ஏன் அவசியம் இருக்காது ?- வீடியோ

    சென்னை இடைத்தேர்தலுக்கு அவசியம் இருக்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவது குறித்து அக்கட்சியினர் விளக்கியுள்ளனர்.

    தினகரன் தரப்பினரின் ஒவ்வொரு நடவடிக்கையும் தீவிரமாகக் கவனித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ' தொகுதிகளில் என்ன பணிகள் நடந்தாலும் உங்களுக்கு வந்து சேர வேண்டியது வந்துவிடும். இனியும் தினகரனை நம்பி வாழ்க்கையைத் தொலைத்துவிட வேண்டாம்' என எச்சரித்து வருகின்றனர் ஆளும்கட்சி அமைச்சர்கள்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல இன்னொரு வெற்றியை எதிர்பார்க்கிறார் தினகரன். அரசியல் ரீதியாக செல்வாக்கைக் காட்ட ஆண்டிபட்டி கைகொடுக்கும் எனவும் நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், தங்க.தமிழ்ச்செல்வன் தரப்பினரோ, ' ஒரு தொகுதிக்கு ஆறு மாதங்களாக எம்.எல்.ஏ என்று யாரும் இல்லாவிட்டால், தேர்தல் நடத்தி புதிய எம்.எல்.ஏவைத் தேர்வு செய்ய வேண்டும் என சட்டம் சொல்கிறது.

    தங்கத்தை வைத்து

    தங்கத்தை வைத்து

    அந்தவகையில் வழக்கை வாபஸ் பெற்று தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவேன். சின்னம்மாவின் செல்வாக்கும் என்னுடைய செல்வாக்கும் வெற்றியைத் தேடித் தரும். இதில் தினகரனுக்கு எந்தப் பங்கும் இல்லை. தங்கத்தை வைத்து செல்வாக்கை உரசிப் பார்க்க நினைக்கிறார் தினகரன். இடைத்தேர்தல் வரட்டும். ஆளும்கட்சிக்கே சவால்விடும் வகையில் வெற்றி பெறுவார் தங்கம்' என்கின்றனர்.

    தினகரனை நம்பி

    தினகரனை நம்பி

    அதேநேரம், ஆளும்கட்சி தரப்பினரோ, " ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு தினகரன் வலிமையான தலைவராக மாறவில்லை. தி.மு.கவைத்தான் இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியினரும் நம்புகிறார்கள். தினகரனை நம்பி சேற்றில் கால்வைக்க அவர்கள் தயாராக இல்லை. அரசியல்ரீதியாக எத்தனையோ பேசிப் பார்த்தார்.

    ஆர்கே நகர் போல்

    ஆர்கே நகர் போல்

    அதற்குள் கூட்டம் ஸ்டாலின் பக்கமும் ரஜினி பக்கமும் போய்விட்டது. வேறுவழியில்லாமல் திவாகரனோடு மோதி இருப்பை நிலைநாட்ட வைத்தார். ஆண்டிபட்டியில் அவர் ஜெயிக்கப் போவதில்லை. ஆர்.கே.நகர் போல பல இடையூறுகள் அந்தத் தொகுதிக்கும் வரத்தான் போகிறது.

    எந்த மரியாதையும் இல்லை

    எந்த மரியாதையும் இல்லை

    அதற்குள் தங்க.தமிழ்ச்செல்வனே எடப்பாடி பக்கம் வந்தாலும் ஆச்சரியம் இல்லை. அதற்கான பணிகளும் களைகட்டத் தொடங்கியுள்ளன. ஏனென்றால், கடந்த ஓராண்டு காலமாக சொந்தப் பணத்தை செலவு செய்துதான் போராடி வருகிறார் தங்கம். அவருக்கு தினகரனிடம் எந்த மரியாதையும் இல்லை.

    முதல்வர் பேச்சு

    முதல்வர் பேச்சு

    சின்னம்மா பேச்சுக்கு மரியாதை கொடுத்து அங்கே இருக்கிறார். நவநீதகிருஷ்ணன், ஜக்கையன் போன்றவர்களே இந்தப் பக்கம் வந்துவிட்டார்கள். வெகுவிரைவில் தங்கமும் இந்த அணிக்கு வந்துவிடுவார். பிறகு இடைத்தேர்தலுக்கு அவசியம் இல்லாமல் போய்விடும். இதைத்தான் இன்று திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் சுட்டிக் காட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி" என்கின்றனர் விரிவாக.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy says there will be no by election. ADMK party members telling why CM said like this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X