For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கானது: முதல்வர் எடப்பாடியார் புகழாரம்!

மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கானது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கானது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் வரவேற்க தக்க அம்சங்கள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அதாவது மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்ககானது என்றும் நடுநிலையானது என்றும் அவர் தெரிவித்துள்ளளார்.

பட்ஜெட்டுக்கு வரவேற்பு

பட்ஜெட்டுக்கு வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார். வேளாண்மை மற்றும் ஊரகத் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

மெகா உணவு பூங்கா திட்டம்

மெகா உணவு பூங்கா திட்டம்

வேளாண்துறைக்கு அரசு நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார். மெகா உணவு பூங்கா திட்டத்தால் தமிழகம் பயன்பெறும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

புறநகர் ரயில் திட்ட நீட்டிப்பு

புறநகர் ரயில் திட்ட நீட்டிப்பு

சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னையில் புறநகர் ரயில் திட்ட நீட்டிப்பு குறித்து மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பூர்த்தி செய்யப்படவில்லை

பூர்த்தி செய்யப்படவில்லை

வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் வேலைவாய்ப்பு, தொழில்துறை முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் இருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

English summary
Chief minister Edappadi palanisamy welcomes General govt budget 2018. He has said that this budget is for development and neutral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X