For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அசாதாரண சூழல்... டிஜிபியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைகுலைந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிஜிபியுடன் தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் போலீசார் நடத்திய தடியடிக் காரணமாக சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டு உள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வர் டிஜிபியுடன் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த தடியடியால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Chief Minister O.Paneerselvam consulting with DGP about the Law and order in Secretariat

மாநிலம் முழுவதும் போர்க்களமாக காட்சியளிக்கிறது. சென்னையில் காவல்துறை வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன்காரணமாக சென்னை முழுவதும் போக்குவரத்து முடங்கியுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டு அசாதரணமான சூழல் நிலவி வருகிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து டிஜிபியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் அபூர்வவர்மா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

English summary
Law and order in the state collapsing. Chief Minister O.Paneerselvam consulting with DGP about the Law and order in Secretariat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X