For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழந்தைகளின் உயிர் குடிக்கும் ஆழ்துளை கிணறுகள்... தொடரும் சோகம்!

Google Oneindia Tamil News

சென்னை: வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே மூடப்படாத 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் இன்று இரண்டரை வயது சிறுவன் தமிழரசன் தவறி விழுந்து உயிரிழந்தான்.

தண்ணீர் தேவைக்காக தோண்டப்படும் ஆழ்துளை கிணறுகள், அஜாக்கிரதையாக மூடப்படாமல் விடுவதால் குழந்தைகளின் உயிரைக் குடித்து விடுகின்றன.

ஏற்கனவே, ஆபத்தான, பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே மாநில அரசுகளுக்கு உத்தர விட்டுள்ளது. அப்படியிருந்தும் ஒரு சிலரின் அஜாக்கிரதையால் அநியாயமாக பல உயிர்கள் தொடர்ந்து காவு கொடுக்கப்படுகிறது.

Child falls into borewell near Vellore, rescue operation underway

இதோ, சமீபத்தில் இந்தியாவில் ஆழ்துளை கிணறு விபத்துக்கள் பற்றிய தொகுப்பு:

  • 2006 ஜூலை 21-ல் 5 வயது பிரின்ஸ் என்னும் சிறுவன் ஹரியாணா மாநிலத்தில் ஹாபாத் என்னுமிடத்தில், விவசாயப் பயன்பாட்டுக்காக தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறில் தவறி விழுந்தான். 50 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் அச்சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
  • 2007 மார்ச் 11-ல், குஜராத்தில் பாவ்நகர் மாவட்டத்தில், ஆர்த்தி என்னும் 4 வயது சிறுமி 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாள். இதே ஆண்டு,
  • மார்ச் 22-ல் ராஜஸ்தானில் உள்ள ராணாபடா என்னுமிடத்தில், 200 அடி ஆழத்தில் விழுந்த, சுனில் என்னும் 3 வயது சிறுவன் மீட்கப்பட்டான்.
  • ஜூலை 27-ல் ஜெய்ப்பூரில் 6 வயது சிறுவன் ஒருவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தான்.
  • 2008, ஜனவரி 30-ல் கர்நாடகாவில் பூஷனூர் என்னும் கிராமத்தில், 40 அடி ஆழத்தில் விழுந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
  • 2008, மார்ச் 28-ல், உத்தரப் பிரதேசத்தில் ஆக்ராவில், 45 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
  • 2009, ஜூன் 21-ல் ராஜஸ்தானில் டவுசா என்னும் இடத்தில் 48 அடி ஆழத்தில் விழுந்த 4 வயது குழந்தை, 19 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டது.
  • 2010, ஜூன் 3-ல், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே 200 அடி ஆழத்தில் விழுந்த கெளர் என்னும் 3 வயது குழந்தை உயிரிழந்தது.
  • 2011, மே 20-ம் தேதி, மகாராஷ்டிராவில் நாசிக் வயல்வெளியில் இருந்த 70 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 18 மாதக் ஆண் குழந்தை உயிரிழந்தது.
  • 2011 செப்டம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுதர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தான்.
  • 2012, ஜூன் 25ம் தேதி குஜராத்தில் ஜஸ்டான் என்னுமிடத்தில், 30 அடி ஆழத்தில் ஒரு வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.
  • 2012 மார்ச் மாதம் இந்தூரில் பயால் என்ற குழந்தை, பயனற்ற ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியானது.
  • 2012 ஜூன் 24ம் தேதி, ஹரியானாவில் குர்காவ்ன் அருகே கோ கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மஹி 70 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்தாள். 4 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஜூன் 24ம் தேதி சடலமாக மஹி மீட்கப்பட்டாள்.
  • 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவலகிரி கிராமத்தில், 600 அடி கிணற்றில் குணா என்ற 3 வயது சிறுவன் தவறி விழுந்தான். 20 அடி ஆழத்தில் சிக்கித்தவித்த சிறுவன் 4 மணி நேர போராட்டத்துக்குப்பின் உயிருடன் மீட்பு.
  • 2013 ஏப்ரல் 27ம் தேதி கரூர் மாவட்டம் சூரிப்பாளையத்தில், 600 அடி ஆழ்துளை கிணற்றில் முத்துலட்சுமி என்ற சிறுமி தவறி விழுந்து இறந்தாள்.
  • 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சங்கரன்கோவில் அருகே 400 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் 6 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப் பட்டான்.
  • 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த 14 மாத குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. மீட்பு குழுவினர் பல மணி நேரம் போராடியும் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை.


English summary
A two-and-a-half-year-old boy fell into an abandoned borewell at Oorambadi village near Arcot about 33 km from Vellore on Sunday morning. Oxygen is being let into the 18-foot borewell to enable the child, Thamizharasan to breathe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X