For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அய்யய்யோ.. சீன இளைஞரை பார்த்ததுமே.. அலறி அடித்து கொண்டு ஓடிய மக்கள்.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு!

ராமேஸ்வரத்தில் சீன இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோன அச்சுறுத்தல்... நடுக் கடலில் கப்பலில் தவிக்கும் 200 இந்தியர்கள்!

    ராமேஸ்வரம்: சீனா இளைஞரை பார்த்ததும் ராமேஸ்வர மக்கள் தலைதெறிக்க நாலாபக்கமும் சிதறி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சீனாவில் வந்த கொரோனா வைரஸால் உலகமே பீதியடைந்து போய் உள்ளது.. நம் தமிழ்நாட்டையும் இது ரொம்பவே கிலியை தந்துள்ளது.. காரணம், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 722 பேர் பலியாகி உள்ளனர். 34,456 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் உள்ளனர்.

    யார் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் சரி, போனாலும் சரி, அவர்களுக்கு அந்தந்த நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் மிக மிக தீவிரமான பரிசோதனை செய்துதான் அனுமதிக்கிறார்கள்.. எந்நேரமும் விழிப்புடனேயே செயல்பட்டும் வருகிறார்கள்.

    எங்கும் அழுகுரல்கள்.. 800-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. சார்ஸை விட கொடூர அரக்கனாக மாறிய கொரோனா! எங்கும் அழுகுரல்கள்.. 800-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. சார்ஸை விட கொடூர அரக்கனாக மாறிய கொரோனா!

    கொல்கத்தா

    கொல்கத்தா

    இந்நிலையில், சீனாவை சேர்ந்த இளைஞர் செங்ஸூ .. இந்தியாவுக்கு டூர் வந்திருக்கிறார்.. கடந்த 28-ம் தேதி எல்லா இடங்களையும் சுற்றி பார்த்தவர் கொல்கத்தாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும் வந்தார்.. ராமேஸ்வரம் பற்றி கேள்விப்பட்டதும், அவருக்கு ஆர்வம் அதிகமாகி விட்டது. அதனால் சாமி கும்பிடலாம் என்று பயபக்தியாக ராமேஸ்வரம் வந்தார்.. ஒரு தனியார் லாட்ஜிலும் ரூம் போட்டு தங்கினார்.

    லாட்ஜ்

    லாட்ஜ்

    இவரை பார்த்ததுமே அந்த லாட்ஜ் மேனேஜர், உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அடுத்த சில மணி நேரத்திலேயே, வட்டாட்சியர், நகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறை மருத்துவர்கள் லாட்ஜுக்கு விரைந்தனர். அதே லாட்ஜில் தங்கியிருந்த மற்றவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.. அவருக்கு கொரானா வைரஸ் டெஸ்ட் ஏற்கனவே எடுக்கப்பட்டதா, இல்லையா என்றுகூட சரியாக தெரியாமல் டென்ஷன் ஆகிவிட்டனர்.

    கேள்வி

    கேள்வி

    ஆனால் தனக்கு எந்த வைரஸும் இல்லை.. கொல்கத்தாவிலேயே கொரோனா டெஸ்ட் எடுத்தாச்சு.. ஒரு பாதிப்பும் இல்லைன்னு தெரிஞ்சப்புறம்தான் தமிழ்நாட்டுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளேயே என்னை விட்டாங்க" என்று இளைஞர் அவர்களிடம் தெரிவித்தார். இருப்பினும், சிலர் தங்களின் பிள்ளைகள் சீனாவில் இருப்பதாகவும், அவர்களை இந்தியாவிற்கு அனுப்ப சீன அரசு அனுமதி மறுத்துவருகிறது.

    பரபரப்பு

    பரபரப்பு

    அப்படி இருக்கும்போது, சீனாவை சேர்ந்த ஒருவர் எப்படி தமிழ்நாடு முழுவதும் அசால்டாக சுற்ற முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும் நம் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட போலீசார் அந்த சீன இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை அதிகாரிகள் தனி வார்டுக்கு கொண்டு சென்று கொரோனா சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் சீன இளைஞர் வருகையால் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    28 year old china young man roams at rameswaram and public panic over coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X