For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்கே நகர் பணப்பட்டுவாடா குறித்து சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் அடுக்கடுக்காக கேள்விகள்- வீடியோ

வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவர் முன்னாள் அதிமுக எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆர்கே நகர் பணப்பட்டுவாடா குறித்து கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: வருமான வரித்துறையினர் ரெய்டில் சிக்கிய முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து பலமணி நேரம் விசாரணை மேற்கொண்டர்.

கடந்த 7ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இவர்களது வீடுகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 Chitlapakkam Rajendran inquired by Income tax official

அதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா, துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரனிடமும் அதிகாரிகள் பல மணிநேரம் துருவித்துருவி கேள்வி கேட்டு விசாரணை நடத்தினர். குறிப்பாக ஆர்கே நகர் இடைதேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது குறித்து நிறையக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

மேலும், அவரிடம் அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும் என கூறியுள்ளனர். அதேபோல், அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ராதிகா ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

English summary
Income tax raided in Minister Vijaya baskar, vice chancellor Geeta lakshmi, Actor Sarathkumar and Ex.MP chitlapakkam Rajendran's house. And official had lengthy inquiry with chitlapakkam Rajendran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X