For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்றுதான் சோ மறைந்தார்!

பல்துறை வித்தகர் என்றும் பல முக்கிய அரசியல் திருப்பங்களுக்கு காரணமாக இருந்தவருமான சோ ராமசாமியின் முதலாமாண்டு நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று தான் சோ மறைந்தார்!- வீடியோ

    சென்னை: பல்துறை வித்தகர் என்றும் பல முக்கிய அரசியல் திருப்பங்களுக்கு காரணமாக இருந்தவருமான சோ ராமசாமியின் முதலாமாண்டு நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

    பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர், நடிகர் என பலமுகங்களைக் கொண்டவர் சோ ராமசாமி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் ஆவர்.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

    சோ நினைவுநாள்

    சோ நினைவுநாள்

    கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரழந்தார். தனது தோழி ஜெயலலிதா உயிரிழந்த 2 நாட்களிலேயே சோ ராமசாமியும் மரணமடைந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

    வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்

    வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்

    சென்னை மயிலாப்பூரில் 1934-ம் ஆண்டு பிறந்த ராமசாமி பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். இதைத்தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

    சோ எழுத்தாளர்

    சோ எழுத்தாளர்

    பல மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் சோ நடித்துள்ளார். பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

    அஞ்சாமல் விமர்சனம்

    அஞ்சாமல் விமர்சனம்

    1970 ஆம் ஆண்டு 'துக்ளக்' என்ற வார இதழையும், 'பிக்விக்' என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் ஆரம்பித்து பத்திரிகையாளராகவும் வெற்றி பெற்றார் சோ. அனைத்து அரசியல் தலைவர்களிடமும் நட்பு பாராட்டிய சோ, கொஞ்சமும் அஞ்சாமல் அனைவரையும் விமர்சனமும் செய்துள்ளார்.

    மோடியை அறிமுகம் செய்தவர்

    மோடியை அறிமுகம் செய்தவர்

    பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர் சோ. தனது துக்ளக் ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் போது முதன் முதலில் மோடியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார். ஆண்டுதோறும் ஜனவரி 15அஆம் தேதி நடைபெறும் துக்ளக் ஆண்டு விழாவில் இடம்பெறும் கேள்வி பதில் வாசர்களின் வரவேற்பை பெற்றது.

    ஜெ.வின் நெருங்கிய நண்பர்

    ஜெ.வின் நெருங்கிய நண்பர்

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராக இருந்தவர். ஜெயலலிதா அரசியல் தொடர்பாக சோவிடம் ஆலோசனை கேட்பார் என்றும் அவரது ஆலோசனைப்படி நடப்பார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதுண்டு.

    திமுக வெற்றிக்கு காரணம்

    திமுக வெற்றிக்கு காரணம்

    1996ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்க இவர் அமைத்த ரஜினி, திமுக காங்கிரஸ் கூட்டணியே காரணம் என்று கூறப்பட்டது. நெருங்கிய நண்பராக இருந்தாலும் தவறை டக்கென சுட்டிக்காட்டுவதில் வல்லவர் சோ.

    அதிமுக - தேமுதிக கூட்டணி

    அதிமுக - தேமுதிக கூட்டணி

    2011ஆம் ஆண்டு அதிமுக - தேமுதிக கூட்டணி உருவானதில் சோவுக்கு பெரும் பங்கு உண்டு. தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர்.

    மோடியின் ராஜகுரு சோ

    மோடியின் ராஜகுரு சோ

    தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார். மோடியால் ராஜகுரு என்றழைக்கப்பட்ட பெருமையும் சோவுக்கு உண்டு.

    பல்வேறு விருதுகள்

    பல்வேறு விருதுகள்

    கோயங்கா விருது, நச்சிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகம் கொண்ட சோவின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று..

    English summary
    Cho Ramaswamy first year death anniverary is following today. Cho was a perfect political criticiser. He was a close friend of former Chief minister Jayalalitha. He deid on 7th of December last year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X