For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி திருவெறும்பூர் கோயிலில் மூன்றாம் ராஜேந்திர சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் 12 நூற்றாண்டு மூன்றாம் ராஜேந்திரன் சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

திருச்சி: திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் ராஜேந்திரன் சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் திருவெறும்பீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 6 நூற்றாண்டிலிருந்தே கல்வெட்டுகள் கிடைக்கின்றன.

Chola inscriptions discovered in Trichy temple

இந்நிலையில், முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர் ஆர்.அகிலா, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் டாக்டர் எம்.நளினி ஆகியோர் திருச்சி திருவெறும்பூர் திருவெறும்பீஸ்வரர்ர் கோயில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஆய்வில், குறிப்பிட்ட இந்த கோயிலில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு சோழர் கால கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.

10 - 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டு மூன்றாம் ராஜேந்திரன் காலத்தில் பொறிக்கப்பட்டது. இந்த கல்வெட்டில் அப்பகுதியில் சோழர் காலத்தில் இரண்டு சைவ மடங்கள் இருந்தது என்றும் அந்த மடங்களுக்கு மாணியமாக நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டு ஆய்வு சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்றதாக கல்வெட்டுகளைக் கண்டுபிடித்த வரலாற்று பேராசிரியர்கள் அகிலா, நளினி ஆகியோர் தெரிவித்தனர்.

English summary
A study of some history professor revealed 10 - 12 century’s Chola incriptions. it was period of Chola Rajendiran III.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X