For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை ஓஎன்ஜிசி ஊழியர்கள் பயணித்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து.. பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

மும்பையிலிருந்து 7 ஓஎன்ஜிசி ஊழியர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மாயமாகிவிட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மும்பையிலிருந்து 7 ஓஎன்ஜிசி ஊழியர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் 30 கடல் மைல் தூரத்தில் கடலில் விழுந்தது. இதில் பயணம் செய்த 4 பேர் பலியாகிவிட்டனர். மற்ற மூவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலில் உள்ள எண்ணெய் கசிவை நீக்க பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டரில் ஓஎன்ஜிசி ஊழியர்கள் 5 பேரும் 2 பைலட்டுகளும் ஹெலிகாப்டரில் இன்று காலை புறப்பட்டனர்.

Chopper missing in Mumbai which has gone with ONGC employees

அந்த ஹெலிகாப்டர் கடலில் மாயமானது. ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் கடைசியாக விமான கட்டுப்பாட்டு அறையை 10.30 மணி அளவில் தொடர்பில் இருந்துள்ளனர். அதன்பிறகு அவர்களது தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து ஓஎன்ஜிசி நிறுவனம் இந்திய கடலோர காவல் படையை தொடர்புகொண்டு ஹெலிகாப்டர் மாயமானது குறித்து புகார் கொடுத்தது.

கடலோர காவல் படை விமானத்தையும், ஊழியர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. எனினும் இது குறித்து ஓஎன்ஜிசியும், பன் ஹெலிகாப்டர் நிர்வாகமும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அப்போது கடலில் ஹெலிகாப்டரின் உதிரிபாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது ஊர்ஜிதமானது. அப்போது காணாமல் போன 7 பேரை தேடும் பணிகள் நடைபெற்றன. அதில் 4 பேரின் சடலங்களை கடற்படையினர் கண்டெடுத்தனர். மற்ற மூவரை தேடி வருகின்றனர்.

English summary
A helicopter with 7 ONGC employees on board, which took off from Juhu airport this morning hasn't landed on the designated oil rig. There is no information on the helicopter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X