For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று புனித வெள்ளி : இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் - தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு

இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடைபெறுகின்றன.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு-வீடியோ

    சென்னை: புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறுவதாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

    பாவிகளுக்காக தன்னை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்த இயேசு கிறிஸ்துவின் பாடுகளை கிறிஸ்தவ மக்கள் உலகம் முழுவதும் நோன்பு தினமாக ஒவ்வொருவரும் கடைப்பிடித்து வருகின்றனர்.

    பிப்ரவரி 14ம் தேதி சாம்பல் தினம் முதல் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் ஒரு சந்தி நோன்பு அனுசரித்து வருகின்றார்கள். இன்று முழு நோன்பு இருந்து சிறப்பு பிரார்தனையில் ஈடுபடுகின்றனர்.

    சிறப்பு வழிபாடுகள்

    சிறப்பு வழிபாடுகள்

    இதையொட்டி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு நிகழ்வு நடந்தது. அப்போது சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடந்தது. ஏராளமான கிறித்தவர்கள் குருத்தோலைகளை சுமந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

    பாதம் கழுவும் நிகழ்ச்சி

    பாதம் கழுவும் நிகழ்ச்சி

    புனித வாரத்தின் 2வது நிகழ்வாக, புனித வியாழன் நேற்று அனுசரிக்கப்பட்டது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முதல் நாள் தமது சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக இது அனுசரிக்கப்பட்டது. பல தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குட் ஃபிரைடே

    குட் ஃபிரைடே

    இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளே புனித வெள்ளி. அந்த வகையில் இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இன்று கிறித்தவ தேவாலயங்களில் நீண்ட நேரம் திருப்பலி, ஆராதனைகள் நடைபெறும். கத்தோலிக்கர் இந்நாளில் நோன்பிருந்து வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் பங்கெடுப்பது வழக்கமாகும். இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என பலவிதமாக அனுசரிக்கப்படுகிறது.

    சிறப்பு பிரார்த்தனைகள்

    சிறப்பு பிரார்த்தனைகள்

    இந்த நாளில் கிறிஸ்தவர்கள் முழு நோன்பு கடைப்பிடிப்பார்கள். இன்று புனித வெள்ளி தினம். இதையொட்டி சென்னை சாந்தோம், பெரம்பூர், பெசன்ட்நகர், எழும்பூர் கதிட்ரல், ராயப்பேட்டை வெஸ்லி உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சாந்தோம், பெசன்ட்நகர், எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகளும், சிலுவை பாதையும் நடைபெற்றது.

    ஈஸ்டர் கொண்டாட்டம்

    ஈஸ்டர் கொண்டாட்டம்

    இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து 3ம் நாள் உயிர்தெழுவதை ஈஸ்டர் தினமாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஞாயிறு கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    English summary
    Jesus Christ, Good Friday prayers were conducted in all churches in the district on the holiest day of Christianity. After the Washing of the Feet rites, the highlight of ‘Maundy Thursday’ celebrations, conducted in all churches on Thursday night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X