For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிறிஸ்துமஸ் விடுமுறை... அடித்து பிடித்து ஊருக்கு செல்லும் மக்கள்... திணறும் பஸ், ரயில் நிலையங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினர் சொந்த ஊர் செல்வதற்காக பஸ், ரயில் நிலையங்களில் காணப்படுகின்றனர்.

பொதுவாக சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் விடுமுறை என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து கல்வி நிமித்தமாகவும், பணி நிமித்தாகவும் சென்னையில் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் ஊருக்கு செல்வர்.

Christmas festival: heavy crowd in CMBT and Central Railway station

இதனால் கோயம்பேடு, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்திருக்கும். இந்நிலையில் வரும் திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுவிட்டது.

இதையடுத்து நேற்று மாலையிலிருந்தே ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பதால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இத்தனை கூட்டங்களுக்கு ஏற்ப கோயம்பேடு பஸ் நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் பல மடங்கு உயர்த்தி விற்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன இன்னும் அடுத்தவாரம் ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. அதற்கும் இதுபோல் தொடர் விடுமுறை விடப்படும். அப்போதும் இதே நிலைதான் என்று பயணிகள் தற்போதே கவலை கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

English summary
As the Christmas festival is going to celebrate on Monday, schools, colleges, private and government staffs gets 3 days continuous holiday, they planned to go to their home towns. From yesterday CMBT and Central Railway station has heavy crowd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X