For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடிவேல் படத்துல வருமே ஒரு காமடி.. ஆமா அதே படம்தான்.. அதே பாணியில்.. சூலூரில் ஏமாந்த இளைஞர்!

Google Oneindia Tamil News

சூலூர்: சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் அரிசி கடையில் நூதன முறையில் கடை உரிமையாளரை ஏமாற்றி அரிசி மூட்டையை ஒருவர் திருடிச் சென்றார். இந்த சம்பவம் வடிவேல் காமெடியை நினைவுப்படுத்துகிறது.

Recommended Video

    வடிவேல் காமெடியில் வருவது போல அரிசிக் கடையில் கைவரிசையைக் காட்டிய இளைஞர் - வீடியோ

    சூலூரில் வசிப்பவர் ராயப்பன் மகன் செந்தில்குமார்(47). இவர் சூலூர் அருகே ரங்கநாதபுரம் பகுதியில் சொந்தமாக அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் தினமும் அருகிலுள்ள பவுண்டரிக்கு வேலைக்குச் செல்வதால் இவரது மனைவி லலிதா (40), மகன் அசோக் குமார் ஆகியோர் அரிசி கடையை பகல் நேரங்களில் கவனித்து வருகின்றனர்.

    பணத்திற்காக பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொலை.. ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய மகன் கைதுபணத்திற்காக பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொலை.. ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய மகன் கைது

    தொகை

    தொகை

    இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் தனக்கு அரிசி தேவை என கூறி செந்தில் குமாரை அழைத்துக் கொண்டு கடை அமைந்துள்ள பகுதிக்கு வந்துள்ளார். அங்கு வந்தவுடன் தனக்கு 5 மூட்டை அரிசி தேவை எனவும் அரிசி மூட்டையை தனது வீட்டுக்கு கொண்டுவந்து தருமாறும் அங்கு வந்து அதற்கான தொகையை பெற்று செல்லுமாறு கேட்டுள்ளார்.

    வேகம்

    வேகம்

    இதை நம்பிய செந்தில்குமார் அரிசி தேவை என வந்த மர்ம நபரின் வண்டியில் இரண்டு மூட்டை அரிசி ஏற்றி விட்டு விட்டு மேலும் மூன்று மூட்டையை தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு மர்ம நபரை பின்தொடர தயாராகியுள்ளார். அப்போது இரண்டு மூட்டை ஏற்றிய நிலையில் மர்மநபர் தனது பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

    சினிமா பட பாணி

    சினிமா பட பாணி

    அவரைத் துரத்திச் சென்ற செந்தில்குமார் அவர் எங்கேயும் காணாததால் திகைத்து நின்றார். இதற்கு அடுத்ததாக தான் ஏமாற்றப்பட்டது செந்தில்குமாருக்கு தெரியவந்துள்ளது. சினிமா பட பாணியில் அரிசி கடையில் நூதனமான வகையில் திருடி உள்ளது அப்பகுதியில் உள்ளவர்களை வியக்க வைத்துள்ளது.

    சாம்பிள்

    சாம்பிள்

    வடிவேல் கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தில் இப்படிதான் கடையில் சாம்பிள் கேட்பார். அந்த கடைக்காரர் திரும்புவதற்குள் பைகளில் அரிசியை திருடி திருடி தனது சகாக்களிடம் கொடுத்துவிடுவார். இப்படியே சாம்பிள் கேட்டு கேட்டு அரிசியை திருடுவார். இதுபற்றி சூலூர் காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார் காவல்துறையினர் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    English summary
    Cinema style technic followed to loot rice in Sulur like Vadivel in Karuppsamy kuthagaitharar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X