For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப்ளஸ் 2வில் 71% மார்க் எடுத்த கோவை மாணவர் ஃபெயில் பயத்தில் ரிசல்டுக்கு முன்பு தற்கொலை

By Siva
Google Oneindia Tamil News

கோவை: கோவையில் ப்ளஸ் 2 தேர்வில் 71 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர் ஒருவர் முடிவு வெளியாகும் முன்பே தோல்வி பயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகியோர் 1,200க்கு 1,195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

Class-12 Student Hangs Self Fearing Failure In Exams

கோவை மாவட்டம் பெரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சக்திகணேஷ்(17). காரமடையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்த அவர் ப்ளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் அவருக்கு தான் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் ஏற்பட்டது.

{ventuno}

இதையடுத்து அவர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ப்ளஸ் 2 தேர்வில் 71 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுகள் வரும் முன்பு அவர் அவசரப்பட்டு உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

English summary
Coimbatore based 17-year old class 12 student hanged himself to death fearing failure in exams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X