For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்பிக்கை வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும்?... கூடுவதற்கு தயாராகிறது சட்டசபை!!

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டசபை விரைவில் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பிக்கை வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படுமா?-வீடியோ

    சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படவுள்ளதாக தெரிகிறது. அதற்காக சட்டசபையை சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

    முதல்வருக்கு எதிராக ஆளுநரை சந்தித்ததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்காததால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    Cleaning work starts in TN Assembly

    இதனிடையே முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இந்நிலையில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் எடப்பாடி வெற்றி பெற்றுவிடுவார். இந்நிலையில மானியக் கோரிக்கைகளுக்கு பிறகு மூடப்பட்ட சட்டசபை திறக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    மேலும் மேடைகளில் உள்ள மைக்குகள், ஒலிப்பெருக்கிகள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதை பார்க்கும் போது சட்டசபை விரைவில் கூடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிகிறது.

    English summary
    After 18 MLAs disqualification, cleaning work in TN Assembly starts, it seems very soon trust vote will be conducted.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X