For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவி பிரதீபா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

மாணவி பிரதீபா குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மாணவி பிரதீபா குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரண நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பெரவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீபா. இவர் பிளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவர் ஆகும் கனவுடன் இருந்த பிரதீபா நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டார்.

இதனால் தனது கனவு தகர்ந்து சென்றதை அடுத்து மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதீபாவின் மரணத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் பிரதீபாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்வு தோல்வியால் மாணவர்கள் தற்கொலை முடிவு கூடாது. பிரதீபாவின் குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Chief Minister Edappadi Palanisamy announces exgratia for Pratheeba's family who commits suicide for not suceeding in Neet exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X