For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனிதா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி- குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் எடப்பாடி

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கனவு நிறைவேறாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

CM announces Rs. 7 Lakhs Financial assistance for Anitha's family

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், அனிதாவின் இறப்புக்கு நான் மனவேதனை அடைகிறேன். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

CM announces Rs. 7 Lakhs Financial assistance for Anitha's family

அவரது குடும்பத்திற்கு தமிழக அரசின் நிதியுதவியாக ரூ.7 லட்சமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அவரது கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

English summary
Chief Minister Edappadi Palanisamy announcesRs.7 lakhs financial assistance for Anitha's family and government job for her family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X