For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார், பைக், தங்கம்.. ஒரு கோடி ரூபாய் பரிசுபொருட்களுடன் களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

மதுரை: அலங்காநல்லூர்ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிச்சாமிமற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர். இதில் வெற்றிபெறுபவர்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

பொங்கல்திருநாளுடன் இணைந்த தமிழரின் பாரம்பரியவீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் பல பகுதிகளில் நடைபெறுகின்றன. குறிப்பாக, இன்று புகழ்பெற்ற மதுரைஅலங்காநல்லூர்ஜல்லிக்கட்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

 CM and Deputy CM Inaugurated Alanganallur jallikattu, which is worth of 1crore prize

காணும் பொங்கலை முன்னிட்டு மதுரைமாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு நடைபெற்ற போராட்டத்திற்குப்பிறகு, ஜல்லிக்கட்டு மீதான ஆர்வம் அதிகமாகிஉள்ளதால், தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இந்த போட்டியில் கலந்துக்கொண்டனர்.

இந்தப் போட்டிகளைத் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்தொடங்கி வைத்தனர். மேலும், பல அமைச்சர்கள்ஜல்லிக்கட்டை காண அங்கு அலங்காநல்லூர் வந்தனர்.

முதல்வர் உறுதிமொழியை வாசிக்க, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், 'நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம், துன்புறுத்த மாட்டோம்', என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து முதல்வரும், துணைமுதல்வரும் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தனர்.

அலங்காநல்லூர்முனியாண்டி கோயில் காளை முதலில்அவிழ்த்து விடப்பட்டது. இந்த மாட்டிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மற்ற மாடுகளும் அவிழ்த்து விடப்பட்டன.

இந்தச்ஜல்லிக்கட்டு போட்டிகளில் சுமார் 1000 காளைகளும், 1241 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதில்சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்குகார், பைக், தங்க நாணயங்கள்வழங்கப்பட உள்ளன. இந்த பரிசு தொகையின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்றும், முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பாக மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் தலா ஒரு காரு பரிசு வழங்கப்படவுள்ளன.

நிகழ்ச்சிநிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டியைஒரு மணி நேரம் நீட்டித்துமுதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதனிடையே, அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்ககாளைகள் மற்றும் வீரர்களுக்கு பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

English summary
CM and Deputy CM Inaugurated Alanganallur jallikattu, which is worth of 1crore prize. Morethan thousand youth participated in the jallikattu and the security is tightened
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X