For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க ரூ.200 கோடி: முதல்வர்

தமிழக மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கோடையில் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க ரூ 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கடந்த வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தற்போதே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைத்தூக்க தொடங்கிவிட்டது. இதனால் மக்கள் தண்ணீர் குடங்களுடன் கார்பரேஷன் லாரியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

CM Edappadi discusses about how to tackle water crisis in TN during Summer

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று (17.4.2018) தலைமைச் செயலகத்தில், கோடை காலத்தில் தமிழ்நாட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய
நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகிக்கும் பொருட்டு, ஊரக பகுதிகளுக்காக ரூ. 50 கோடியும், நகராட்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்காக ரூ. 120 கோடியும், பேரூராட்சிகளுக்காக ரூ. 14 கோடியும். தமிழக குடிநீர் வடிகால் வாரியத்திற்காக ரூ. 16 கோடியும், என மொத்தம் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மழைநீர் சேமிப்பு தொடர்பாகவும் கழிவுநீரை சுத்திகரித்து நல்ல நீராக மாற்றி அதை பயன்படுத்துவது தொடர்பாகவும் திட்டங்களை தீட்டவும் உத்தரவிட்டார்கள்.

சென்னை மாநகரை பொறுத்தவரை குழாய்கள் மூலம் தண்ணீர் செல்லாத இடங்களுக்கு தண்ணீர் வழங்க ஏதுவாக, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் மூலம் புதிய திட்டம் தீட்டவும்.

பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா திட்டம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பயிர் காப்பீட்டு திட்டத்தில் நிலுவையிலுள்ள பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வேளாண் பெருமக்களுக்கு உடனடியாக காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுத் தரவும் உத்தரவிட்டார்.

அரசு செயலாளர் அந்தஸ்தில் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது மாவட்டங்களுக்கு வரும் வாரத்தில் நேரடியாக சென்று குடிநீர் விநியோக நிலையை கண்காணித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டார்.

English summary
CM Edappadi Palanisamy discusses how to tackle the water crisis in Tamilnadu during Summer and to provide proper water supply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X