சேலம்: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்து வைத்தார். முதல்கட்டமாக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இன்று மாலைக்குள் 20 ஆயிரம் கனஅடியாக இது உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newest FirstOldest First
6:24 PM, 19 Jul
செய்யாதுரையிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை
அருப்புக்கோட்டையில் நடக்கும் வருமான வரி சோதனையை அடுத்து விசாரணை
செய்யாதுரையின் மகன்கள் உறவினர்களிடம் அதிகாரிகள் விசாரணை
அருப்புக்கோட்டை சோதனை மூலம் ரூ.190 கோடி பணம், 110 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது
4:57 PM, 19 Jul
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்
4:38 PM, 19 Jul
காங். எம்.பிக்கள் அனைவரும் லோக்சபா வர வேண்டும்- கொறடா உத்தரவு பிறப்பிப்பு
நாளை மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதால் கொறடா உத்தரவு
4:32 PM, 19 Jul
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ துணை குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை
டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல்
3:29 PM, 19 Jul
புதிய ரூ.100 நோட்டின் மாதிரியை ஆர்பிஐ வெளியிட்டது
ஊதா நிறத்தில் புதிய ரூ.100 நோட்டு
2:12 PM, 19 Jul
காவிரி தீர்ப்புக்கு எதிரான கேரள அரசின் சீராய்வு மனு தள்ளுபடி
காவிரி நீரில் மின்சாரம் தயாரிக்க அனுமதி கோரியது கேரளா
1:51 PM, 19 Jul
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
சென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை வானிலை மையம் தகவல்
1:20 PM, 19 Jul
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது- தேவஸ்வம் போர்டு திட்டவட்டம்
10 வயது முதல் 55 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது
உச்சநீதிமன்றத்தில் தேவஸ்வம் போர்டு திட்டவட்டம்
1:09 PM, 19 Jul
சென்னையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு அமைப்பு
மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், உள்ளிட்டவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்
சிறுமிக்கு காவல்துறை அனுமதியுடன் சிறப்பு மருத்துவக்குழு சிகிச்சை அளிக்க உள்ளதாக தகவல்
1:02 PM, 19 Jul
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி வழக்கு
பேராசிரியை நிர்மலா தேவி சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்
நிர்மலாதேவி சாத்தூர் நீதிமன்றத்தில் 7வது முறையாக ஆஜர்
பேராசிரியைக்கு 15 நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது
12:57 PM, 19 Jul
தமிழகத்தில் நடந்த வருமான வரி சோதனைகளை பட்டியலிட்டார் ஸ்டாலின்
சென்னையில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
12:51 PM, 19 Jul
சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்
ஒப்பந்ததாரர் செய்யாதுரை பணம் பதுக்கியது கண்டுபிடிப்பு
மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரகசிய இடத்தில் பணம் பதுக்கல்
ரூ.4 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிப்பு
12:00 PM, 19 Jul
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சிபிஎஸ்இ தகவல்
11:58 AM, 19 Jul
நீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப்பெயர்ப்பாளர்கள்தான் காரணம் - சிபிஎஸ்இ
11:52 AM, 19 Jul
புதுச்சேரியில் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் இல்லை
பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால் சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
இந்திய வரலாற்றில் முதல் முறையாக பட்ஜெட் மசோதா நிறைவேறாமல் சட்டசபை ஒத்திவைப்பு
11:45 AM, 19 Jul
நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது.. முதல்வர் சூசகம்
ஆந்திர மாநில எம்.பிக்கள் அந்த மாநில பிரச்சினைக்காக நம்பிக்கையில்லா தீர்மானம்
காவிரி பிரச்சினையில் அதிமுக எம்.பிக்கள் போராடியபோது எந்த மாநிலமும் ஆதரவளிக்கவில்லை
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி
11:01 AM, 19 Jul
மரணத்திற்கு முன்பு கூட காவிரி விவகாரம் குறித்து விவாதித்தார் ஜெயலலிதா- முதல்வர்
ஜெயலலிதா குறித்து பேசும் போது நா தழுதழுத்து கண்ணீர்விட்ட முதல்வர்
10:37 AM, 19 Jul
வரலாற்றில் முதல்முறையாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
அணை திறப்பு நிகழ்ச்சியில் ஆட்சியர், அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்பு
10:36 AM, 19 Jul
மேட்டூர் அணையை சில நிமிடங்களில் திறந்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடி
10:25 AM, 19 Jul
குரூப் 1 தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு உயர்வு
குரூப் 1 தேர்வுக்கு வயது வரம்பு உயர்த்தி அரசாணை வெளியீடு
குரூப் 1 தேர்வு வயது வரம்பை உயர்த்தி அறிவித்திருந்தார் முதல்வர்
குரூப் 1 தேர்வு வயது, பொதுப்பிரிவுக்கு 30 வயதிலிருந்து 32 ஆக உயர்வு
பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 35 வயதிலிருந்து 37 ஆக உயர்வு
10:12 AM, 19 Jul
லோக்சபாவில் திமுகவிற்கு ஒரு உறுப்பினரும் இல்லை
தார்மீக அடிப்படையில் திமுக ஆதரவு அளிப்பதாக ஸ்டாலின் உறுதி
10:12 AM, 19 Jul
நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
10:11 AM, 19 Jul
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திமுக ஆதரவு
திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
9:54 AM, 19 Jul
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கு பாஜகவினர் கறுப்புகொடி