For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு 19ஆம் தேதி முதல் நீர் திறக்க முதல்வர் எடப்பாடியார் உத்தரவு!

மேட்டூர் அணையில் இருந்து வரும் 19 ஆம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரியில் அதிகரிக்கும் தண்ணீர்... 90 அடியை எட்டும் மேட்டூர் அணை

    சென்னை: மேட்டூர் அணையில் இருந்து வரும் 19 ஆம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

    காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக போதுமான தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

    இந்நிலையில் தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன. இதனால் கர்நாடக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    51.72 டிஎம்சியாக இருப்பு

    51.72 டிஎம்சியாக இருப்பு

    இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81 அடியை தாண்டியுள்ளது. அணையில் நீர் இருப்பு 51. 72 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 99000 கனஅடிக்கு மேல் உள்ளது.

    19ஆம் மேட்டூர் அணை திறப்பு

    19ஆம் மேட்டூர் அணை திறப்பு

    இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 19ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரப்பப்படும்.

    நெல், உரங்களை இருப்பு

    நெல், உரங்களை இருப்பு

    நீர் நிலைகளை நிரப்பி பாசனத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    மேலும் சம்பா சாகுபடிக்கு தேவையான நெல், உரங்களை போதிய அளவில் இருப்பில் வைக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

    நெல் ரகங்கள்

    நெல் ரகங்கள்

    நீண்ட கால நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கு ஏற்ப நெல் ரகங்களை இருப்பில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சசி.ஆர்.1009, சி.ஆர்.1009 சப்1, ஏ.டி.டி.49 போன்ற நெல் ரகங்களை இருப்பு வைக்கவேண்டும் என்றும் முதல்வரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    விவசாயிகள் மகிழ்ச்சி

    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டிருப்பது காவிரி டெல்டா விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy orders to open Mettur Dam on July 19th for cultivation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X