For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குட்கா ரெய்டு... அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முதல்வர் எடப்பாடி அழைப்பு?

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதை அடுத்து அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் கொடுத்ததாக சென்னையில் பிடிபட்ட குட்கா தொழிலதிபர் மாதவராவ் வாக்குமூலம் அளித்திருந்தார்.

CM Edappadi Palanisamy invites Minister Vijayabaskar after the issue of Gutkha raid

அதன் பேரில் இனறு அமைச்சர் விஜயபாஸ்கர், பிவி ரமணா, ஓய்வு பெற்ற கமிஷனர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகள் என 40 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜயபாஸ்கரின் பிடி இறுகுகிறது.

எதிர்க்கட்சிகளும் அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இதனிடையே விஜயபாஸ்கரை டெல்லி அழைத்து சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரவு 8 மணிக்கு தனது பசுமை வழிச்சாலை வீட்டில் சந்திப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியிலிருந்து விலகி விடுமாறு வலியுறுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

English summary
CM Edappadi Palanisamy invites Minister Vijayabaskar after the issue of Gutkha raid. Probably he asks him to resign his post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X