For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொன்னார்... சொன்னதை செய்தார்... கருணாஸ் விவகாரத்தில் முதல்வர் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலின், கருணாஸ் பற்றி முதல்வர் எடப்பாடி- வீடியோ

    சென்னை: கருணாஸ் விவகாரத்தில் சொன்னதையே செய்து அதிரடி காட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே முக்குலத்தோர் புலிப்படைகள் அமைப்பின் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது போலீஸ் யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு என்னுடன் மோத தயாரா.

    என் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கை கால்களை உடைத்து விடுவேன். முதல்வரே என்னை பார்த்து பயப்படுகிறார் என்று சகட்டுமேனிக்கு அள்ளிவிட்டார் கருணாஸ்.

    எடப்பாடி

    எடப்பாடி

    இதையடுத்து அவர் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. கடந்த 20-ஆம் தேதி காவலர் நிறைவாழ்வு பயிற்சியை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

    சிறப்பான செயல்பாடு

    சிறப்பான செயல்பாடு

    அப்போது அவர் கூறுகையில், ராணுவத்துக்கு இணையாக காவல் துறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்தார். நமது காவல் துறை எல்லா காலங்களிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் நிலை நாட்டுவதிலும் சிறப்பாக செயல்படுகிறது.

    கடமையை செய்யும்

    கடமையை செய்யும்

    நீங்கள் (காவல் துறை) ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நீங்கள் என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வாக்கிற்கேற்பு பணியாற்றி வருகிறீர்கள். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். சட்டம் தன் கடமையை செய்யும் என்றார் முதல்வர்.

    கருணாஸ் கைது

    கருணாஸ் கைது

    சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதல்வர் கூறியதை கருணாஸை கைது செய்ததன் மூலம் நிரூபித்து காட்டி அதிரடி காட்டி விட்டார். அத்துடன் எச் ராஜாவையும் அவர் கைது செய்து தன் அதிரடியை மேலும் காட்டி சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை அவர் நிரூபிக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.

    English summary
    CM Edappadi Palanisamy says law will do its job. After this statement Karunas gets arrested.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X