For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே பெய்து வரும் கனமழையால் அங்குள்ள நீர் நிலைகளும் அணைகளும் நிரம்பி திறந்துவிடப்பட்டன.

CM Edappadi Palanisamy says that 50 villages are affected by flood

இதனால் ஈரோடு பவானி ஆறு, திருச்சி கொள்ளிடம் ஆறு உள்ளிட்டவை நிரம்பியுள்ளன. இதனால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இது குறித்து ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்ய வந்தார்.

அப்போது அவர் கூறுகையில் ஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழையால் அணைகளை திறக்க நேரிட்டது .

7000 மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 1976 வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்கப்படும்.

இடிந்த வீடுகளுக்கு பதிலாக பாதுகாப்பான இடங்களில் மாற்று வீடுகள் கட்டித் தரப்படும். குடிமராமத்து பணிகள் முழுமையாக செய்யப்படும் என்றார் பழனிச்சாமி.

English summary
CM Edappadi Palanisamy says that 50 villages are affected by flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X