For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

108 பைக் ஆம்புலன்ஸ்... இனி வீட்டுக்கே வரும் மருத்துவ சேவை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சந்து பொந்தெல்லாம் புகுந்து வந்து மக்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை தரும் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்று துவக்கி வைக்கப்பட்ட அவசரகால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்களில், 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 இருசக்கர வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆடவர் மட்டுமின்றி, பெண் அவசரகால மருத்துவ உதவியாளரும் இயக்கும் வண்ணம் இவ்வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் விலை மதிப்பற்ற மனித உயிர் இறப்புகள் ஏற்படுகின்றன. இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மன உளைச்சலுக்கு ஆளாவதோடு வருமானம் ஈட்டும் நபரை இழந்து பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகின்றனர். உயிர் இழப்பை தடுக்கவும், விலை மதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்றவும் தமிழக அரசு, அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் தலைக்காய சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி வருவதோடு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் திட்டத்தில் செயல்பட்டு வரும் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை கடந்த 5 ஆண்டுகளில் 385லிருந்து 755ஆக உயர்த்தியுள்ளது.

இதுமட்டுமின்றி, 66 பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு அவசரகால ஊர்திகள், 78 மலையோரங்கள் மற்றும் மணல் பாங்கான பகுதிகளில் இயங்கக்கூடிய சிறிய ரக அவசரகால ஊர்திகள், சென்னை புறநகர் பகுதியில் 2 அவசரகால சிகிச்சை 108 அவசரகால சேவையை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், அவசரகால முதலுதவிக்காக 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 41 இருசக்கர வாகனங்களின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவால் இன்று துவக்கி வைத்துள்ளார்.

108 பைக் ஆம்புலன்ஸ்

108 பைக் ஆம்புலன்ஸ்

அவசரகால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்களில், 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 இருசக்கர வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆடவர் மட்டுமின்றி, பெண் அவசரகால மருத்துவ உதவியாளரும் இயக்கும் வண்ணம் இவ்வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதன் முறையாக பெண் மருத்துவ உதவியாளர்களால் இயக்கப்படும் அவசரகால முதலுதவிக்கான ஸ்கூட்டர் வடிவிலான இருசக்கர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

10 நிமிடத்தில் முதலுதவி

10 நிமிடத்தில் முதலுதவி

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு, முதல் 10 நிமிடங்கள் பிளாட்டினம் நிமிடங்கள் (Platinum 10 minutes)என்று அழைக்கப்படுகிறது. இந்த முதல் 10 நிமிடங்களில் பாதிப்பின் தன்மையை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதியை அசையாமல் செய்து (Immobilisation) உயிர் மீட்பு (Resuscitation), உயிர் வாயு வழங்குவது (Oxygen), இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது (Bleeding control) போன்ற முதலுதவிகள் பாதிப்பின் தன்மையை குறைத்து, உயிர் காக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

உயிர் காக்கும் சிகிச்சை

உயிர் காக்கும் சிகிச்சை

விபத்து பகுதிகளுக்கு ‘108' அவசரகால ஊர்திகள் செல்வதற்கு முன்பு, பாதிப்புக்குள்ளானவருக்கு உடனடியாக தரமான முதலுதவி கிடைக்க இந்த இருசக்கர முதலுதவி வாகனங்கள் வழிவகை செய்யும். இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதற்கான கால அளவு மேலும் குறையும்.

மருந்துகளும் சிகிச்சைகளும்

மருந்துகளும் சிகிச்சைகளும்

இந்த இருசக்கர முதலுதவி வாகனத்தில், கையில் எடுத்து செல்லக்கூடிய உயிர் வாயு சிலிண்டர் (Portable oxygen Cylinder), நாடித்துடிப்பை கண்டறியும் கருவி (Pulsoxymeter), இரத்த அழுத்தத்தை அறியும் கருவி (BP apparatus), இரத்தத்தில் சர்க்கரை அளவை அறியும் கருவி (Glucometer), உடல் சூட்டை அறியும் கருவி (Digital Thermometer) போன்ற உயிர் காக்கும் கருவிகளும் தேவையான மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன.

அவசரகால முதலுதவி

அவசரகால முதலுதவி

இந்த இருசக்கர வாகனத்தை பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ உதவியாளர் ஓட்டுவார். அவசர ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி தன்மையுடன் கூடிய வண்ணத்தில் இவ்வாகனங்கள் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளன. அவசரகால அழைப்பு, 108 அவசர கட்டுப்பாடு அறைக்கு வந்தவுடன், பாதிப்பின் தன்மைக்கேற்ப இந்த இருசக்கர வாகனம் அனுப்பி வைக்கப்பட்டு, பாதிப்பின் தன்மையை ஆய்வு செய்து முதலுதவி வழங்கப்படும்.

நெரிசல் மிகுந்த பகுதிகளில் 108

நெரிசல் மிகுந்த பகுதிகளில் 108

பாதிப்பின் தன்மை அதிகமாகவும், மருத்துவமனையில் உடனடி சிகிச்சை பெற வேண்டிய அவசியமும் இருப்பின், 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார். இந்த அவசரகால இருசக்கர வாகனம், முதல் கட்டமாக சென்னை மாநகரத்தில் முக்கிய சந்திப்புகள், குறுகிய மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டு, பகல் பொழுதில் போக்குவரத்து அதிகம் இருக்கக்கூடிய இடங்களில் இயக்கப்படும். இவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து, இந்தத் திட்டம் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த சிறப்பு சேவை மூலம், மேலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும்" என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

701 புதிய பேருந்துகள்

701 புதிய பேருந்துகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 701 புதிய பேருந்துகள் மற்றும் 65 சிற்றுந்துகளை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 52 பேருந்துகள், விழுப்புரம் சார்பில் 97 பேருந்துகள், சேலம் சார்பில் 85 பேருந்துகள், கோயம்புத்தூர் சார்பில் 93 பேருந்துகள், கும்பகோணம் சார்பில் 202 பேருந்துகள், மதுரை சார்பில் 154 பேருந்துகள், திருநெல்வேலி சார்பில் 18 பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 30 வழித்தடங்களில் 65 சிற்றுந்துகள் ஆகியவற்றை முதல்வர் இன்று கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

English summary
TamilNadu Chief Minister flagged off the new Two Wheeler services of Health and Family Welfare Department
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X