For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்சாரம் தாக்கி 8 பேர் உயிரிழப்பு: முதல்வர் ஜெயலலிதா ரூ.1 லட்சம் நிதியுதவி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அரியலூர், விழுப்புரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் 8 குடும்பங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, தலா 1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தி:

CM orders Rs.1 lakh each 8 power shock death victim family

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கேட்டு துயரம் அடைந்தேன். அவர்களின் மரணத்தினால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த ஜூன் மாதம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். அரியாலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுகுணா உயிரிழந்தார். அதேபோல கடந்த ஜூன் 21ம் தேதி பழனி என்பவரின் மகள் சின்னத்தம்பி, கோவிந்தராஜ் என்பவரின் மகன் சக்கரபாணி கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத் தை சேர்ந்த அஸ்வின் கடந்த 23ம் தேதி சாலையோரத்தில் இருந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்தார். அதேபோல திருச்சி செங்குளம் மலர்கொடி என்பவர் மின்சார கம்பியை மிதித்து உயிரிழந்தார்.

கடந்த ஜூன் 23ம் தேதி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சந்தோஷ் மின்சாரம் தாக்கி உயிரிந்தார்.

இவர்களின் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Chief Minister Jayalalitha ordered to distribute Rs 1 lakh each to 8 persons who killed in the electricity accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X