For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பெருகியது வளர்ச்சியா? ஊழலா? ராமதாஸ் சரமாரி கேள்வி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பெருகியது வளர்ச்சியா அல்லது ஊழலா என்று ராமதாஸ் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பழனிசாமி ஆட்சிக் காலத்தில் பெருகியது வளர்ச்சியா, ஊழலா என்று பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் சந்திப்பு நடத்தினார். அவர் அதில் சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்தார்.

CM Palanisamy ruling develops Scam only says, PMK’s Founder Ramadoss

அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஊழல்தான் அதிகரித்துள்ளது. இவருடைய பதவிக்காலத்தில் 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல். தார் கொள்முதல் செய்ததில் 1000 கோடி ரூபாய் ஊழல். டி.என்.பி.எஸ்.சி. முதல் தர அதிகாரிகள் தேர்ந்தெடுப்பதில் ஊழல்.

மணல் கொள்ளை ஊழல். தாது மணல் கொள்ளை ஊழல். மின்சாரக் கொள்முதல் ஊழல், அரசுத்துறை பணியாளர்கள் நியமனம் செய்வதில் ஊழல். மருத்துவக் காப்பீட்டு ஊழல். குட்கா ஊழல். வாக்கி டாக்கி ஊழல் என ஒரு பெரிய ஊழல் பட்டியலே இருக்கிறது.

இவருடைய ஆட்சிக்காலத்தில்தான் வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக பெரியதாக பேசுகிறார். இவருடைய ஆட்சிக்காலத்தில் பெருகியது வளர்ச்சியா? ஊழலா? என்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி பொதுமக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா? என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். நான் தயாராக இருக்கிறேன்.

உள்ளாட்சி தேர்தல் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடத்தியிருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய பணம் ரூ.3,558 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பணத்தை உள்ளாட்சி தேர்தல் நடத்தினால்தான் மத்திய அரசு அளிக்கும். ஆனால், இவர்கள் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமலேயே மத்திய அரசிடம் கேட்டுப்பார்த்தார்கள். மத்திய அரசு தரவில்லை.

உள்ளாட்சி தேர்தல் அட்டவனையை தாக்கல் செய்யாவிட்டால் மாநில தேர்தல் ஆணையர் சிறை செல்ல நேரிடும் என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லாத நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த மறுக்கிறது. ஏனென்றால், உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் ஆளும்கட்சி படுதோல்வி அடைவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

மேலும், எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் பிளஸ் டு படித்தால் வேலை என்று ஒரு கூறியுள்ளார். முதல்வர் இதற்கான செயல் திட்டம் என்ன வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் பிளஸ்டு படித்தவர்கள் மற்றும் அதற்கு மேலும் படித்தவர்கள் 80 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், மேலும் 1 கோடி பேர் பதிவு செய்யாமலும் இருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த ஒன்றரை ஆண்டுகளில் எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்துள்ளார்.

இந்த கேள்விகளை நாங்கள் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே கேட்டிருக்கிறோம். அரசு வேலைகளில் 5 லட்சம் வேலைகள் பல வருடங்களாக காலியாக இருக்கின்றன. அதையெல்லாம் அவர்கள் நிரப்பவே இல்லை, என்று ராமதாஸ் கூறினார்.

English summary
PMK’s Founder Ramadoss says on Sunday that what is developed in CM Palanisamy ruling, development? or Scam?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X