For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்தரை அடையாளம் காட்டும் ஆசிரியர்கள்... எடப்பாடி பழனிச்சாமி சொன்ன ஜென் கதை

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனச்சாமி ஜென் குட்டிக்கதை ஒன்றைக் கூறினார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் சிறந்து செயலாற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜென் குட்டிக்கதை ஒன்றை கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் ஜென் கதை சொல்லி அசத்தினார்.

CM Palanisamy tells short story in Teacher's day

முதல்வர் சொன்ன குட்டிக்கதை:

ஒரு மலை அடிவாரத்தில் இரண்டு பெரிய பாறைக்கற்கள் கிடந்தன. அவற்றில் ஒரு கல் மற்றொரு கல்லிடம் சொன்னது, நான் இங்கிருந்து வேறு இடத்திற்குச் சென்றால் என்ன?.

அதற்கு மற்றொரு பாறை, நாம் எங்கே இருந்தாலும் கல்லாகத்தான் இருக்கப்போகிறோம். அதற்கு இங்கேயே இருக்கலாமே என்றது.

முதல் பாறை அதைக்கேட்டு அமைதியானது. சில நாட்கள் கழித்து, அந்த வழியாக வந்த சிற்பிகள் அந்த இரு பாறைகளையும் சிற்பம் செதுக்குவதற்கு ஏற்றதாக தேர்வு செய்தனர். மறுநாள் வந்து அவற்றை எடுத்துச்செல்ல முடிவுசெய்து திரும்பிச்சென்றனர்.

அவர்கள் சென்ற பிறகு, முதல் பாறை உற்சாகமாகச் சொன்னது, நாளை நம்மை அந்த சிற்பிகள் எடுத்துச்செல்லப்போகிறார்கள். நாம் அழகிய சிற்பங்களாக மாறிவிடலாம்.

அந்த சிற்பிகள் நம்மைத் தூக்கிச்சென்றால் உளியாலும் சுத்தியலாலும் அடிப்பார்கள். வலி தாங்கமுடியாமல் தவிப்போம். அதனால், நாளை அவர்கள் வரும்போது, மண்ணில் நன்கு அழுந்திகொண்டு அவர்கள் தூக்க முடியாதபடி இருந்துவிடுவேன் என்ற இரண்டாவது பாறை.

அடுத்த நாள், சிற்பிகள் வந்து முதல் பாறையை மட்டும் எடுத்துச்சென்றார்கள். செதுக்கி புத்தர் சிலை ஒன்றைச் செய்தார்கள். அந்தச் சிற்பம் மலை உச்சியில் எழும்பிய கோயில் தெய்வமானது. மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொண்டதால் அந்த பாறைக்கல் தன்னுள் இருந்த புத்தரை அறிந்துகொண்டது.

மாற்றத்திற்கான வாய்ப்பை முழு மனதுடன் ஏற்காத மற்றொரு பாறை மலையேறுபவர்களின் காலடி படும் கல்லாகவே இருந்துவிட்டது.

இந்தக் கதையில் பாறையை புத்தராக மாற்றிய சிற்பிகளைப் போல, ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவருக்குள்ளும் இருக்கும் புத்தரை கண்டுபிடித்து அவர்களுக்கு அடையாளம் காட்டுகிறார்கள்.

என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லி முடித்ததும்தான் தாமதம். கைதட்டல் அடங்க வெகு தாமதமானது.

English summary
Tamil Nadu Chief Minister Edapadi Palanisamy Narrated a Short story teacher's day function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X