For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமலின் பேச்சுரிமைக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்களை கைது பண்ணுங்க.. பினராயி விஜயன்

நடிகர் கமலின் பேச்சுரிமைக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நடிகர் கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து மகாசபாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்தார்.

கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் இந்து தீவிரவாதம் குறித்து எழுதியுள்ளார். இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கமல் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் கமல் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். கமலின் இந்த கருத்து நாடும் முழுவதும் விவாதம் செய்யும் அளவுக்கு சென்று விட்டது.

 கண்டனம்

கண்டனம்

கமலின் கருத்து குறித்து இந்து மகாசபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா கூறுகையில் இந்து மதம் குறித்து பேசும் கமல்ஹாசன் உள்ளிட்டோரை கொலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தூக்கிலிட வேண்டும். இதுதான் அவர்களுக்கு சரியான தண்டனையாக இருக்கும்.

 உரிமை இல்லை

உரிமை இல்லை

இந்து மதத்தின் மீது அவதூறாக பேசுபவர்களுக்கு இந்த புண்ணிய பூமியில் வாழ உரிமை கிடையாது. அவர்களுக்கு மரணம் ஒன்றுதான் தண்டனை என்று கடுமையாக பேசியிருந்தார் பண்டிட் அசோக். இந்த பேச்சு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

முதல்வர் கண்டனம்

இந்து மகாசபாவின் பேச்சுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் தனது தொடர் பதிவுகளில் கூறுகையில், கமல்ஹாசனின் பேச்சுரிமைக்கு எதிராக இந்து மகாசபா தலைவர்கள் கொலை மிரட்டல் விடுப்பது கடும் கண்டனத்துக்குரியது.

மதவாதிகளை கைது செய்யுங்கள்

இதுபோன்று கொலை அல்லது படுகொலை மிரட்டல் விடுக்கும் மத வெறியர்கள் மற்றும் தீவிர சிந்தனையாளர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும். மகாத்மா காந்தி, பன்சாரே, கல்புர்கி, தபோல்கார் மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோருக்கு நடந்தது என்ன என்பது இந்த நாடே அறியும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

English summary
Chief minister Pinarayi Vijayan said on Saturday that people will reject forces practising communal and divisive agenda.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X