For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முக்கொம்பு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. உடைந்த அணையைப் பார்வையிடுகிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    முக்கொம்பு அணை.. மதகுகள் உடைந்து நொறுங்கும் அவலம்!- வீடியோ

    சென்னை: முக்கொம்பு மேலணையின் உடைந்த மதகுகளையும் பாலத்தையும் பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அங்கு செல்கிறார்.

    திருச்சி அருகே முக்கொம்பில் காவிரியின் குறுக்கே தடுப்பணை உள்ளது. மேலணை என்று கூறப்படும் இங்கிருந்துதான் கொள்ளிடம் மற்றும் கால்வாய்களுக்கு காவிரியிலிருந்து தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

    CM To visit Mukkombu check dam tomorrow

    வெள்ளையர் ஆட்சியில் கட்டப்பட்ட அணை இது. சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேய பொறியாளர் கட்டிய அணை இது. இதன் மேலே பாலம் உள்ளது. இந்த அணையில் மொத்தம் 45 ஷட்டர்கள் எனப்படும் மதகுகள் உள்ளன. இதில் 9 மதகுகள் நேற்று இரவு உடைந்து போய் விட்டன. பாலமும் உடைந்து விட்டது.

    இதனால் கொள்ளிடத்தில் கூடுதலாக தண்ணீர் போய் கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்காகியுள்ளது. இந்த நிலையில் உடைந்த ஷட்டர்கள் மற்றும் பாலத்தைப் பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முக்கொம்பு வரவுள்ளார். நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் ஷட்டர்கள் சீரமைப்பு குறித்து அவர் ஆலோசனை செய்வார் என்று தெரிகிறது.

    English summary
    CM Edapapdi Palanisamy will visit Mukkombu check dam tomorrow to inspect the broker Shutters and bridge.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X