For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீடு வீடாக சோதனை… விதிமீறல் குறித்த ஆய்வில் குதிக்கிறது சிஎம்டிஏ

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் முதல் 3 தளங்கள் உள்ள கட்டடங்கள் வரை விதிமீறல் உள்ளதா என்பதை அறிய வீடு வீடாக சோதனையிட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும்ம் முடிவு செய்துள்ளது.

இதற்காக 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் இன்று முதல் இந்த சோதனையில் ஈடுபடும்.

மவுலிவாக்கத்தில்

மவுலிவாக்கத்தில்

சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டடம் சில கடந்த 29-ந் தேதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

அனுமதி அளவையும் தாண்டி

அனுமதி அளவையும் தாண்டி

இடங்களை ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவது, நீர் நிலைப் பகுதிகளில் கட்டடங்களை எழுப்புவது, அனுமதி பெற்ற அளவையும் தாண்டி கூடுதல் மாடிகளை கட்டுவது போன்ற குற்றங்கள் சென்னையில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

ஆய்வில் ஈடுபட

ஆய்வில் ஈடுபட

இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்களிப்பு குறித்தும் அதிருப்தி கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஆய்வில் ஈடுபட சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது.

19 குழுக்கள்

19 குழுக்கள்

60 அதிகாரிகளைக் கொண்ட 19 குழுக்கள் போடப்பட்டுள்ளன. இந்தக் குழு இன்று முதல் ஆய்வில் ஈடுபடவுள்ளது.

சோதனை

சோதனை

சென்னையில் உள்ள 350 பல மாடி கட்டிடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், தரை தளம் மற்றும் 3 மாடிகளைக் கொண்ட 350 கட்டிடங்களை சோதனையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

திட்ட அனுமதியின்படி கட்டப்பட்டுள்ளதா?

திட்ட அனுமதியின்படி கட்டப்பட்டுள்ளதா?

கட்டடங்களுக்கு அளிக்கப்பட்ட திட்ட அனுமதியின்படி அவை கட்டப்பட்டுள்ளதா? அனுமதி மீறப்பட்டுள்ளதா? விதி மீறலுடன் கட்டப்பட்டு இருந்தால், அதற்கான காரணங்கள் என்ன? இந்த விதி மீறல்களால் கட்டடங்களின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதா? என்பது பற்றிய ஆய்வை மேற்கொள்வார்கள்.

English summary
CMDA has formed 19 squads and to conduct an inspection in multi storey buildings in Chennai from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X