For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்கானிக் புடவைகள்… காட்டன் புடவைகள்… தீபாவளிக்கு பெண்களின் ஃபேவரைட்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளிக்கு பட்டும்... டிசைனர் சேலைகளையும் விரும்பும் பெண்கள் மத்தியில் கைத்தறி, காட்டன் புடவைகளை விரும்புபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

காட்டன் புடவை ரசிகர்களுக்காகவே கோ ஆப்டெக்ஸ் இந்த ஆண்டு இயற்கை வண்ணங்களால் உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் காட்டன் புடவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெண்களின் மனதைக் கவர்ந்த புடவைகளாய் இருக்கிறது.

இல்லத்தரசிகளையும், இளம்பெண்களையும் கவரும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 30 சதவீதம் தள்ளுபடி மற்றும் விதவிதமான டிசைன்களை தயாரிக்கப்பட்ட பட்டுப்புடவைகள் மற்றும் கைத்தறி, காட்டன் ஆடைகளை அறிமுகம் செய்வது வழக்கம்.

Co-optex launches organic cotton sarees

30 சதவிகித தள்ளுபடி

தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தங்களது விற்பனை நிலையங்களில் 30 சதவீத தள்ளுபடிகளுடன் விற்பனையை தொடங்கி வருகின்றன.

250 டிசைன்களில் புடவைகள்

இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 200க்கு அதிகமான வெவ்வேறு டிசைன்களில் தயாரிக்கப்பட்ட பட்டு சேலைகள் மற்றும் 250 விதவிதமான டிசைன்களில் தயாரிக்கப்பட்ட கைத்தறி மற்றும் காட்டன் புடவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆர்கானிக் புடவைகள்

பட்டுப்புடவைகள், கைத்தறி மற்றும் காட்டன் புடவைகளுடன் புதிதாக உடல் நலத்திற்கும், சுற்றுச்சுழலுக்கும் தீங்கு விளைவிக்காத ரசாயண உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் காட்டன் புடவைகளை அறிமுகம் செய்துள்ளோம். மற்ற காட்டன் புடவைகளைப்போல்தான் ஆர்கானிக் புடவைகளும் நெய்யப்படும்.

இயற்கை வண்ணங்கள்

புடவைகளுக்கான வண்ணங்கள் இயற்கை முறையில் ரோஜா, செம்பருத்தி போன்ற பல்வேறு பூ வகைகளிடம் இருந்தும், வெங்காயம், பீட்ரூட் போன்ற காய்கறிகள், இது தவிர செடிகள், கொடிகள் போன்ற தாவரங்களை பயன்படுத்தி அவற்றில் இருந்து கலர்கள் சேகரிக்கப்பட்டு எளிதில் சாயம் போகாத வகையில் இந்த ஆர்கானிக் காட்டன் புடவைகள் தயாரிக்கப்பட்டுள்ளனவாம்.

பாரம்பரிய புடவைகள்

இயற்கை முறையில் தயாரான இந்த ஆர்கானிக் காட்டன் புடவைகளின் விலை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 300 முதல் ரூ.4,000 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பழமையான பாரம்பரியமிக்க செட்டிநாட்டின் பாரம்பரிய சின்னங்களை புடவைகளில் நெய்யச் செய்து, செட்டிநாடு புடவைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

காட்டன் புடவைகள்

இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் கோவை காட்டன் சேலைகளை அதிகளவில் விரும்பி அணிகிறார்கள். நெகமம் பகுதியில் தயாரிக்கப்படும் சேலைகள் சவுத்காட்டன் என்றும், கோவை காட்டன் சேலை ரகங்கள் என்றும் உலகெங்கும் விற்பனையாகி வருகின்றன. இந்த ரகங்கள் ரூ.1,500 முதல் 2 ஆயிரத்து 500 வரை விற்பனையாகிறது.

அக்வா காட்டன்

தற்போது தீபாவளிக்கு அக்வா காட்டன் என்ற புதிய ரக சேலை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காட்டன் சேலைகளுக்கு இளம் பெண்களிடம் அதிகளவு மவுசு உள்ளது. குறிப்பாக பார்டர் பெரிதாக உள்ள ரகங்கள் அதிகளவில் விற்பனையாகிறது. இதேபோல் சுடிதார் ரகங்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இவை ரகத்திற்கு ஏற்றவாறு ரூ.ஆயிரம் முதல் விற்பனையாகிறது என்கின்றனர் விற்பனையாளர்கள்.

நீங்க எங்க கிளம்பிட்டீங்க... ஆர்கானிக் புடவை வாங்கத்தானே?

English summary
Co-optex launches sale of sarees woven with Organic cotton and also colored using natural dyes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X