For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கமாண்டர் ராமாராவ் உறுதி செய்தார் என்பது தவறானது: கடலோர காவல்படை

மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கமாண்டர் ராமாராவ் உறுதி செய்தார் என்பது தவறானது என கடலோர காவல்படை மறுப்பு தெரிவித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தி பேச வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினர்-வீடியோ

    சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை மண்டபம் கமாண்டர் ராமாராவ் உறுதி செய்தார் என்பது தவறான தகவல் என கடலோர காவல்படை மறுப்பு தெரிவித்துள்ளது.

    ராமேஸ்வரம் மீனவர்கள் இந்தி மொழி பேசாததால் இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 ராமேஸ்வரம் மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

    Coast Guard clarifies Commander Ramarao statement on firing issue

    ஆனால் இந்திய கடலோர காவல்படை இந்த துப்பாக்கிச் சூட்டை மறுத்து வருகிறது. அதேபோல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், மீனவர்கள் உடலில் பாய்ந்த குண்டுகள் கடலோர காவல்படைக்கு சொந்தமானது அல்ல என கூறியிருந்தார். இதை தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் ஆமோத்திருந்தார்.

    இந்ந்நிலையில் மண்டபம் கமாண்டர் ராமாராவ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், மீனவர்கள் படகில் இருந்தது கடலோர காவல்படையினர் பயன்படுத்தும் .22 காலிபர் குண்டுகள்தான்; இருப்பினும் கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பதை ஏற்கவோ, மறுக்கவோ முடியாது என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

    கமாண்டர் ராமாராவ் தெரிவித்த கருத்து, மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை உறுதி செய்வது போல் இருந்தது. ஆகையால் ஊடகங்கள் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை உறுதி செய்தார் என்றே செய்தி வெளியிட்டன. இது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இன்று இந்திய கடலோர காவல்படை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கமாண்டர் ராமாராவ் தெரிவித்த கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது; துப்பாக்கிச் சூடு நடந்ததை ராமாராவ் உறுதி செய்தார் என்ற தகவல் தவறானது என மறுப்பு தெரிவித்துள்ளது.

    English summary
    Indian Coast Guard has denied that the Commander Ramarao not accept the firing on Rameswaram fishermen.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X