For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டோர்னியர் விமான விமானிகள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை.. கடலோர காவல்படை ஐ.ஜி.

Google Oneindia Tamil News

சென்னை: விபத்துக்குள்ளான டோர்னியர் விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கடலோர காவல்படை ஐ.ஜி., சர்மா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மாயமான விமானத்தில் பயணித்தவர்ககளை கண்டுபிடிக்கும் வரை அவர்களை தேடும் பணி தொடரும் என்று கூறினார். தற்போது வரை கிடைத்த தகவல்படி, 3 பேரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும், 3 பேரையும் காணாமல் போனவர்களாக தான் கருதுவதாகவும், ஐ.ஜி.ஷர்மா தெரிவித்தார்.

I.G.Sharma

விமான விபத்து எதனால் நடந்தது என இப்போது கூற முடியாது என்று கூறிய ஐ.ஜி.ஷர்மா, மீட்கப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டி, மீனம்பாக்கம் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளததாகவும், அதில் இருந்து விபரங்கள் பெற இன்னும் ஒரு வாரம் ஆகும் எனவும் கூறினார்.

இதனிடையே கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி சிதம்பரம் கடல் பகுதியில் 16 கடல் மைல் தூரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென்று மாயமாகி விபத்துள்ளான டோர்னியர் விமானத்தின் 2 என்ஜின்கள், வால் பகுதி, காக்பிட் குரல் பதிவு சாதனம், லேண்டிங் கியரின் ஒரு பகுதி மற்றும் லைப் ஜாக்கெட் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

English summary
Coast guard IG Sharma has said that no Chances to alive all pilots were in dornier
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X