For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஹா.. சட்னிக்கு வந்துருச்சு ஆப்பு.. வறட்சியால் தேங்காய் விலையும் உயரப்போகுதாம்!

தேங்காய் சாகுபடி உற்பத்தி குறைவு என்பதால் விலையும் உயரும் என கூறப்படுகிறது.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    வறட்சியால் தேங்காய் விலையும் உயரப்போகுதாம்!-வீடியோ

    கோவை: தேங்காய் சாகுபடி செய்யும் பகுதிகளில் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதால், தேங்காய் மற்றும் கொப்பரை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கோவையில் உள்ள வேளாண்மை பல்கலை கழகம் கணிப்பினை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவின் மலைத்தோட்ட பயிர்களின் பரப்பளவில் தேங்காய் 58 சதவீதம் பங்களிக்கிறது. தேசிய தோட்டக்கலை வாரியத்தின் 2017- 18 ஆம் ஆண்டின் முன் கூட்டியே மதிப்பீட்டின்படி நாட்டில் 20.82 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் தேங்காய் சாகுபடி செய்யப்பட்டு, 164.93 லட்சம் டன் உற்பத்தி செய்யப்Gட்டு உள்ளது.

    மொத்த உற்பத்தியில் கேரளா, தமிழகம் , கர்நாடகா , ஆந்திரா ஆகிய மாநிலங்கள் 91 சதவீதம் பங்களிக்கின்றன. கடந்த சில மாதங்களாக தேங்காய் எண்ணை விலை அதிகரித்து வருகிறது.

    தேங்காய் விளையும் பகுதிகள்

    தேங்காய் விளையும் பகுதிகள்

    இப்பருவத்தில் தேங்காய் சாகுபடி செய்யும் மாநிலங்களில் உற்பத்தியும் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் தேங்காய் மற்றும் கொப்பரை விலை இனியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கணித்து உள்ளது.

    திண்டுக்கல், கன்னியாகுமரி

    திண்டுக்கல், கன்னியாகுமரி

    தமிழகத்தில் கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய இடங்கள் தேங்காய் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். இம்மாவட்டங்களில் இருந்து தமிழகத்தின் சந்தைகளுக்கு தேங்காய் வரத்து தொடங்கி உள்ளது

    ஜுன் முதல்வாரம் வரத்து தொடங்கும்

    ஜுன் முதல்வாரம் வரத்து தொடங்கும்

    அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தேங்காய் வரத்து ஆரம்பித்து உள்ளது. கர்நாடகாவில் இருந்து வரும் ஜுன் முதல் வாரத்தில் தேங்காய் வரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கணித்து உள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், வறட்சி மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக தேங்காய் உற்பத்தி கணிசமாகக் குறைந்து உள்ளதாகவும், கேரள சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்தால் மட்டுமே தேவை அதிகரிக்கும் என தெரிவித்து உள்ளனர்.

    அதிகரிக்கும் தேங்காய் விலை

    அதிகரிக்கும் தேங்காய் விலை

    ஈரோட்டில் உள்ள அவல்பூந்துறை சந்தையில் கடந்த 18 ஆண்டுகளாக நிலவிய தேங்காய் மற்றும் கொப்பரை விலை நிலவரத்து ஆய்வு செய்தது. அதில் மே, ஜூன் மாத இறுதி வரை தரமான தேங்காய் கிலோவிற்கு 20 முதல் 23 ரூபாய் வரையும், கொப்பரைக்கு 130 முதல் 135 வரையும் விலை கிடைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாகவும் வேளாண் பல்கலைக் கழகம் தெரிவித்து உள்ளது.

    English summary
    Coconut and coconut prices are likely to increase in the production of coconut cultivation, according to the Agricultural University of Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X