For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதியார் பல்கலை தொலைதூர கல்வி இயக்குநர் மதிவாணன் சஸ்பென்ட்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்குநர் மதிவாணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர் : லஞ்சம் வாங்கிய புகாரில் பாரதியார் பல்கலைக்கழக தொலை தூர கல்வி இயக்குனர் மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து அவரை பணி நீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி பேராசரியர் பணிநியமனத்துக்கு லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். துணைவேந்தர் கணபதியுடன் பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

Coimbatore Bharathiyar university DDE director suspended

ஏற்கனவே துணைவேந்தர் பதவியில் இருந்த கணபதி நீக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதில் தொலை தூர கல்வி இயக்குனர் மதிவாணனுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து மதிவாணன் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை தாக்கலின் போது துணை வேந்தரின் மனைவி பெயரும் இணைக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் லஞ்சப் புகாரில் சிக்கிய மதிவாணனை பணிநீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

English summary
Coimbatore Bharathiyar university DDE director Mathivaanan suspended by university administration as loot case filed against him in connectio with lecturers appointment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X