For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை கலைமகள் கல்லூரியில் மாணவி உயிரிழந்த விவகாரம்.. போலி சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது!

கோவை கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை மாணவி உயிரிழக்க காரணமான போலி சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது!

    ஈரோடு: கோவை கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கோவை கலைமகள் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேரிடர் பயிற்சியின் போது, கோவை நரசிங்கபுரத்தை சேர்ந்த லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார்.

    மாணவி மறுத்த போதும் இரண்டாவது மாடியில் இருந்து பயிற்சியாளர் தள்ளிவிட்டதால் சன் ஷேடில் அடிப்பட்டு மாணவி உயிரிழந்தார்.

    பயிற்சியாளர் கைது

    பயிற்சியாளர் கைது

    இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலி பயிற்சியாளர்

    போலி பயிற்சியாளர்

    இந்நிலையில் ஆறுமுகம் அளித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது. அவர் மத்திய, மாநில அரசு ஊழியர் கிடையாது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    போலி சான்றிதழ் தயாரிப்பு

    போலி சான்றிதழ் தயாரிப்பு

    இந்நிலையில் மாணவி உயிரிழந்தது தொடர்பாக, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாணவி உயிரிழப்புக்கு காரணமான போலி பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அசோக் என்பவர் கைது

    அசோக் என்பவர் கைது

    போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவரை ஈரோடு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

    என்டிஎம்ஏவை சேர்ந்தவர் அல்ல

    என்டிஎம்ஏவை சேர்ந்தவர் அல்ல

    இதனிடையே கோவையில், தனியார் கல்லூரியில் பேரிடர் பயிற்சி அளித்த ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பை சேர்ந்தவர் அல்ல என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    உள்துறை அமைச்சகம் விளக்கம்

    உள்துறை அமைச்சகம் விளக்கம்

    இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஆறுமுகம், என்டிஎம்ஏவால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர் கிடையாது. போதிய பாதுகாப்பு இல்லாத பயிற்சிக்கு என்டிஎம்ஏ ஒப்புதல் அளிப்பது கிடையாது. கல்லூரியில் நடந்த பயிற்சிக்கும், என்டிஎம்ஏவுக்கும் தொடர்பு கிடையாது எனக் கூறியுள்ளது.

    English summary
    Coimbatore girl dead case one more person has been arrested. A person named Ashoke who helped Arumugam to make fake certificates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X