For Daily Alerts
Just In
மோடிக்கு கொலை மிரட்டல்.. வைரலான வாட்ஸ்அப் ஆடியோ.. கோவை வாலிபர் அதிரடி கைது
கோயம்புத்தூர் : பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டதாக ரபீக் என்பவர் உரையாடிய வாட்ஸ் அப் ஆடியோ அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியை கொல்லதிட்டமிட்டுள்ளதாக ரபீக் என்பவர் உரையாடும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த ஆடியோவில் பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை கொல்ல நாங்கள் தான் வெடிகுண்டு வைத்தோம் என்றும் உரையாடப்படுகிறது.

ஆனால் இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை என்ன என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில் இந்த ஆடியோ அடிப்படையில் ரபீக்கை கோவை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிகிறது.