For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா.. மெஷினுக்குள் விதை.. கோவை நிறுவனத்தின் "பசுமைப் புரட்சி"!

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் தங்களிடம் வாங்கும் மோட்டார்களுடன் பசுமைப்புரட்சி செய்ய வசதியாக விதைகளை டெக்ஸ்மோ நிறுவனம் அனுப்பி வருகிறது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போதைய காலகட்டத்தில் இயற்கை அழிக்கப்பட்டு வருவதால் அதை காக்க பசுமை புரட்சி அவசியமாகிறது. இதற்காக சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மரம் நடுதலை ஊக்குவித்து வருகின்றன.

Coimbatore Texmo industries do green revolution

திருமண விழாக்கள் உள்ளிட்ட சுப விழாக்களிலும் இதுபோன்ற மரங்களை தாம்பூலமாக கொடுத்து வருகின்றன. இந்நிலையில் கோவையில் உள்ள டெக்ஸ்மோ மோட்டார் நிறுவனமும் பசுமை புரட்சியில் குதித்துள்ளது.

அந்த நிறுவனம் தான் உற்பத்தி செய்த மோட்டார்களை அட்டைப் பெட்டிகளில் அடைத்து விற்பனைக்காக அனுப்பும்போது, பெட்டிக்குள் தனது வாடிக்கையாளர்கள் பசுமைப் புரட்சி செய்ய வசதியாக வேப்பமர விதைகளையும் சிறு பையில் வைத்து அனுப்புகிறது.

லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு இருக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் சமூகத்துக்கும் சூற்றுச்சூழலுக்கும் செய்யும் நல்ல காரியமாக உள்ளது. அதை கோவை போன்ற நிறுவனங்கள் செய்வது வரவேற்கத்தக்கது.

English summary
Coimbatore texmo industries do green revolution by giving seeds in small bag.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X