For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிஎஸ்டி-க்கு பின் கோவை மண்டல வரிவருவாய் 18% அதிகரித்துள்ளது: கோவை ஜிஎஸ்டி ஆணையர் தகவல்

ஜிஎஸ்டி-க்கு பின் கோவை மண்டல வரி வருவாய் 18 விழுக்காடு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

கோவை: ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பிறகு கோவை மண்டலத்தில் 18% வரி வருவாய் அதிகரித்து உள்ளதாக கோவையின் ஜிஎஸ்டி ஆணையாளரான ஶ்ரீனிவாச ராவ் தெரிவித்து உள்ளார்.

ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்றதை முன்னிட்டு கோவையில் ஜிஎஸ்டி வார விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவையின் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால்துறையினர் ஆணையாளர் ஶ்ரீனிவாசராவ் கலந்து கொண்டார். மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழில்துறையினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

coimbatore zone tax revenue has risen 18 percent after the gst

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:

கோவை மண்டலத்தில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பிறகு 18% வரி வருவாய் அதிகரித்து உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த வரி வசூலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரி செலுத்தாதவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஜிஎஸ்டி வரி செலுத்துவது தொடர்பாக தொழில் துறையினருக்கு தொடர்ந்து உதவிகளை செய்தும் வருகிறோம்.

சிறு, குறு தொழில் துறையினருக்கு ஜிஎஸ்டி குறித்த சட்டங்களை பின்பற்றுவதில் சிக்கல்கள் இருந்து வருகிறது. இருப்பினும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பிறகு கோவை மண்டலத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரி செலுத்துவதில் இணைந்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Coimbatore zone tax revenue has risen 18 percent after the GST
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X