For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீயில் கருகிய குடும்பம்... கந்து வட்டியை தடுப்போம் என்கிறார் நெல்லை கலெக்டர்

கந்து வட்டி கொடுமைக்காக 4 பேர் தீக்குளித்த நிலையில் கந்து வட்டியை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    பரிதாபம்! கந்து வட்டியின் கோரப்பசிக்கு கருகிய உயிர்கள்-வீடியோ

    திருநெல்வேலி: திருநெல்வேலியில் கந்து வட்டி கொடுமையால் தீ குளித்த 4 பேரில் மூவர் உயிரிழந்து விட்டனர். கந்து வட்டியை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

    கடையநல்லூர் அருகேயுள்ள காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் 5 வயது மதிசரண்யா, ஒன்றரை வயதுள்ள அட்சய பரணியா ஆகியோர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Collector warns usurers, asks victims of kandhu vatti to file complaints

    நால்வரும் உடனடியாக மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி 4 பேரையும் பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீ குளித்த நால்வரும் படுகாயமடைந்துள்ளனர். 70 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

    Collector warns usurers, asks victims of kandhu vatti to file complaints

    கந்து வட்டி கொடுமையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ஆட்சியர், உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எனினும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இரண்டு குழந்தைகளும் சுப்புலட்சுமியும் சிசிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

    English summary
    Tirunelvely collector has asked victims of ‘kandhu vatti’ to lodge complaints with the District Police Office on all working days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X