For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம்: ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி முற்றுகை- பெங்களூரு நெடுஞ்சாலையில் நெரிசல்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியை மாணவர்கள் முற்றுகையிட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி முற்றுகை-வீடியோ

    சென்னை : மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியை மாணவர்கள் முற்றுகையிட்டனர். மாணவர்களின் திடீர் முற்றுகையால் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தமிழக விவசாயிகளுக்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தரக்கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், மாணவர்கள் என அனைவரும் தமிழக உரிமைக்காக போராடி வருகின்றனர்.

    College students seige Sriperumbudur toll gate traffic disrupted

    இந்நிலையில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியை 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகையிட்டனர். மத்திய அரசை கண்டிக்கும் விதமாக சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    மாணவர்களின் திடீர் போராட்டத்தையடுத்து வாகனங்களும் சுங்கச்சாவடியில் தேக்கம் அடைந்தன. இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    English summary
    College students seige Sriperumbudur toll gate urging centre to implement cauvery management board, due to protest traffic disrupted in the tollgate and the charges collection were affected.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X