For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்ப்பவர்கள் கண்களில் கோளாறு.. அதனால்தான் எல்லாம் காவியாக தெரிகிறது: ஜெயக்குமார் விதண்டாவாதம்

பார்ப்பவர்கள் கண்ணில் கோளாறு இருப்பதாலேயே சிவுப்பு நிறம் காவி நிறமாக தெரிகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பார்ப்பவர்கள் கண்ணில் கோளாறு இருப்பதாலேயே சிவுப்பு நிறம் காவி நிறமாக தெரிகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஜெயலலிதாவுக்கு பிடித்த நிறமும் இரட்டை இலைச்சின்னத்தின் நிறமான பச்வை வண்ணத்திலேயே அதிமுக பேனர்கள் வைக்கப்படும். ஆனால் தற்போது புதிதாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேனர்கள் காவி நிறத்தில் வைக்கப்பட்டுள்ளன.

color of the banner is visible as saffron because of the problem of eyes:Minister Jayakumar

இது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பாஜகவின் பிரதிபலிப்பே இது என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று விளக்கமளித்துள்ளார். அதாவது டெங்கு ஒழிப்பு தின கூட்டத்தில் இருந்தது காவிநிற பேனர் அல்ல என தெரிவித்துள்ளார்.

அது சிவப்பு நிற பேனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். பார்ப்பவர்கள் கண்ணில் கோளாறு இருப்பதாலேயே சிவுப்பு நிறம் காவி நிறமாக தெரிகிறது என கூறியுள்ளார்.

அதிமுகவின் நிறம் மாறவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், இன்னும் 2 வாரத்திற்குள் இலங்கை கடற்படை வசமுள்ள மீனவர்களின் படகுகள் தமிழகம் கொண்டுவரப்படும் என அவர் கூறியுள்ளார். மீனவர் உதவித்தொகை, மீனவ பெண்களின் சேமிப்பு தொகை தீபாவளிக்கு முன்னதாகவே வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Minister Jeyakumar said that the color of the banner is visible as saffron because of the problem of eyes. The banner was red color he said. ADMK color not changed Jayakumar said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X