• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

”ஓட்டுப் போட்டீங்களா?” அப்போ கொக்கரக்கோ சிக்கன் கடையில ஒரு கிலோ கறிக்கு 20% தள்ளுபடி!

|

சென்னை: பொது தேர்­தலில் மக்கள் அனைவரும் வாக்­க­ளிப்­பதை ஊக்­கு­விக்க எப்போதும் இல்லாத அள­விற்கு இந்திய தேர்தல் ஆணையம் பல்­வேறு நடவடிக்கை­களை எடுத்­திருந்தது.

"ஓட்டு போடு­வது ஒவ்­வொ­ரு­வரின் ஜனநாயக கடமை " என்­பதை விளக்கும் விளம்­பர தட்­டிகள் , சுவ­ரொட்­டிகள், ஊடக விளம்­ப­ரங்கள், குறுந்­த­க­டுகள் உள்ளிட்­ட­வற்றை வெளியிட்­டது.

இதேபோன்று, சமூக பொறுப்­பு­ணர்­வுள்ள பல தனியார் நிறு­வ­னங்­களும் வாக்களிப்பின் முக்கியத்து­வத்தை வலி­யு­றுத்தி விழிப்புணர்வு விளம்­ப­ரங்­களை வெளியிட்­டன.

வியாபார உத்தியில் நிறுவனங்கள்:

வியாபார உத்தியில் நிறுவனங்கள்:

அதே சமயம் சில நிறு­வ­னங்கள் அவற்றின் வர்த்­த­கத்தை அதிகரித்துக் கொள்ள இந்த பிர­சார உத்­தியை பயன்­ப­டுத்திக் கொண்­டுள்­ளன.

“மை” இருந்தா தள்ளுபடி:

“மை” இருந்தா தள்ளுபடி:

இந்­நி­று­வ­னங்கள் வாக்­க­ளித்­த­தற்கு சான்­றாக கை விரலில் உள்ள அடை­யாள மையை காண்­பிப்­போ­ருக்கு சலுகை விலையில் பல்­வேறு பொருட்­களை வழங்குவ­தாக அறி­வித்­துள்­ளன.

லேக்மே சலூன்:

லேக்மே சலூன்:

இந்த வகையில் சென்­னையை சேர்ந்த சிகை அழகு நிறு­வ­ன­மான "லேக்மே சலூன்" கை விரலில் அடை­யாள மையை காண்­பிக்கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு 50 சத­வீத சலுகை விலையில் சிகை அலங்­காரம் செய்­யப்­படும் என்று அறிவித்துள்­ளது. இச்­ச­லுகை வரும் 30 ஆம் தேதி வரை கிடைக்கும் என இந்நிறுவனம் தெரி­வித்­து உள்­ளது.

நேச்சுரல்ஸ்:

நேச்சுரல்ஸ்:

அது போன்று " நேச்­சுரல்ஸ்" நிறு­வனம் தேர்தல் நாளன்று அதன் அனைத்து விதமான அழகு பரா­மரிப்பு சேவை­க­ளுக்­கான கட்­ட­ணத்தில் 20 சதவீதம் தள்­ளு­படி வழங்­கி­யது.

 எப்பீபீ நிறுவனம்:

எப்பீபீ நிறுவனம்:

எப்பீபீ விற்­ப­னை­ய­கங்­களில் தேர்தல் நாளை முன்­னிட்டு நேற்று பெண்­க­ளுக்­கான பிரத்­யேக ஆடை­களின் விலையை 10 சத­வீதம் குறைத்­தது.

கேக் வேர்ல்டு:

கேக் வேர்ல்டு:

"கேக் வேர்ல்டு" நிறு­வனம் அதன் அனைத்து வகை கேக்குகளின் விலையில் 15 சத­வீதம் தள்­ளு­படி செய்­துள்­ளது.

ராஜா சிக்கன் கடை:

ராஜா சிக்கன் கடை:

அயனா­வ­ரத்தில் உள்ள ராஜா சிக்கன் அண்டு மட்டன் சென்டர் ஒரு கிலோ கோழிக்­கறி விலையில் 20 ரூபாய் தள்ளு­படி செய்துள்­ளது.

பிராஸ் டேக்ஸ்:

பிராஸ் டேக்ஸ்:

ஆழ்­வார்­பேட்­டையில் உள்ள பிராஸ் டேக்ஸ் நிறு­வனம் பல­த­ரப்­பட்ட ஆடை­களின் விலையில் 10 சத­வீதம் தள்­ளு­படி சலு­கையை அறி­வித்­துள்­ளது.

ஆன்லைன் சலுகை:

ஆன்லைன் சலுகை:

இந்நிறுவனம் கை விரலில் அடையாள மை உள்­ளதை பட­மெ­டுத்து அனுப்பும் "ஆன்லைன்" வாடிக்­கையாளர்­க­ளுக்கு விற்­பனை விலையில் 15 சத­வீத தள்­ளு­படி வழங்கு­கி­றது. இச்­ச­லுகை வரும் மே மாதம் 1 ஆம் தேதி வரை கிடைக்கும் என இந்­நிறுவனம் தெரி­வித்­துள்­ளது.

மெக்டொனால்ட்ஸ்:

மெக்டொனால்ட்ஸ்:

மெக்­டொ­னால்ட்ஸ் நிறு­வனம் அதன் "ராயல் மீல்" பர்கர் வாங்­கு­வோ­ருக்கு வரும் 27 ஆம் தேதி வரை "மெக்ப்­ளரி" ஐஸ்­கிரீம் இல­வ­ச­மாக வழங்கப்­படும் என அறிவித்­துள்­ளது.

ராம்ராஜ் காட்டன்:

ராம்ராஜ் காட்டன்:

ராம்ராஜ் காட்டன் நிறு­வனம் அடை­யாள மையை காண்­பித்து 1000 ரூபாய் மதிப்புள்ள ஆடை­களை வாங்கும் வாடிக்­கை­யா­ள­ருக்கு இலவசமாக துண்டை வழங்­கு­கி­றது. இச்­ச­லுகை வரும் 30 ஆம் தேதி வரை அமலில் உள்­ள­தாக இந்நிறுவனம் தெரி­வித்­துள்­ளது.

விழிப்புணர்வு + வியாபாரம்:

விழிப்புணர்வு + வியாபாரம்:

இது போன்று இந்­தியா முழு­வதும் பல நிறு­வ­னங்கள் தேர்தல் விழிப்­பு­ணர்வு பிரசா­ரத்தில் அவற்றின் வர்த்­த­கத்தை அதி­க­ரித்துக் கொள்ளும் நட­வ­டிக்­கையில் ஈடுபட்­டுள்­ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Lot of companies gave election times offers to the people who are all registered their votes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more