For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீசில் புகார் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தற்கொலை செய்ததாக கூறப்படும் நாகப்பனின் மகள் ராதிகா இன்று புகார் கொடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குமிழி, கன்னிவாக்கம், நாட்டேரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராதிகா. இவர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை நடத்தும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரில் கூறியிருப்பதாவது: என்னுடைய தந்தை நாகப்பன். அவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நாகப்பன், லாரி டிரைவராக கடந்த இருபது ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

complaint against against lakshmy Ramakrishnan

என்னுடைய தந்தைக்கும், தாய் அம்பிகாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்தனர். நான் வாரம் ஒரு முறை என் தந்தையை சந்திப்பேன். இந்நிலையில் என்னுடைய அம்மா அம்பிகாவின் தங்கையான ரேணுகா, சொத்து பிரச்னை தொடர்பாக நாகப்பனை சந்தித்து பேசினார். அதற்கு உதவி செய்ய முடியாது என்று நாகப்பன் சொல்லி ரேணுகாவை திரும்ப அனுப்பி விட்டார்.

இதனால் நாகப்பன் மீது ரேணுகா, ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த 5.8.2016ல் ரேணுகாவின் மகள்களுக்கு உதவி தொகை வழங்கப்போவதாகவும் அதற்கு கையெழுத்திட வேண்டும் என்று நாகப்பனை ரேணுகா ஜி தமிழ் தொலைக்காட்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதன்பிறகு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் நிர்வாகிகள் என்னையும், என்னுடைய அம்மா அம்பிகாவையும் அங்கு அழைத்தனர். அப்போது என்னுடைய தந்தை மற்றும் எங்களிடமிருந்த செல்போன் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அவர்கள் வாங்கி கொண்டு தனி அறையில் அடைத்து வைத்தனர்.

மேலும், ரேணுகா மற்றும் என் தந்தைக்கிடையே உள்ள குடும்ப பிரச்னையை சுமூகமான முறையில் தீர்த்து கொள்ள நாங்கள் உங்களுக்கு கவுன்சலிங் தருவதாக கூறி நாகப்பனிடம் விசாரித்தனர். அதை அவருக்கே தெரியாமல் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தன்னுடைய மகள்களுக்கு நாகப்பன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ரேணுகா புகார் கொடுத்ததாக கூறி லட்சுமிராமகிருஷ்ணன் அவரிடம் விசாரித்துள்ளார். அந்த பொய் புகாரை நாகப்பன் மறுத்தார்.

அப்போது சட்டத்துக்கு புறம்பான விசாரணையில் நாகப்பனை லட்சுமிராமகிருஷ்ணன் கடுமையான மனம் வருந்ததக்க வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதை அவர், என்னிடம் சொல்லி அழுதார். அவருக்கு நான் ஆறுதல் கூறினேன். இந்நிலையில் 22.8.2016ல் அந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்பினார்கள். உடனடியாக ஜி தமிழ் தொலைக்காட்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதை ஒளிப்பரப்ப வேண்டாம் என்று கூறினோம்.

ஆனால் மீண்டும் 23.8.2016ல் மதியம் ஒளிபரப்பினார்கள். இதனால் என் தந்தையை அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் கேவலமாக பார்த்தனர். அவமானத்தினால் மனஉளைச்சல் ஏற்பட்டு 23.8.2016ல் இரவு 8 மணிக்கு நாகப்பன் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக என்னுடைய பாட்டி நாகம்மாள் பள்ளிகரனை போலீஸ் நிலையத்தில் 23.8.2016ல் புகார் கொடுத்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே என்னுடைய தந்தை நாகப்பன் தற்கொலைக்கு காரணமான ரேணுகா, மற்றும் அவருடைய மகள்கள், சட்டத்துக்கு புறம்பாக விசாரணை நடத்திய லட்சுமிராமகிருஷ்ணன், மற்றும் உதவி மற்றும் ஒளிபரப்பு செய்த ஜி தமிழ் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

English summary
police complaint against Zee Tamil's popular show Solvathellaam Unmai By Director Lakshmy Ramakrishnan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X