For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பொர்க்கி" புகழ் சு.சாமியின் டிவிட்டர் பக்கத்தை முடக்குங்கள்... போலீஸ் கமிஷனரிடம் புகார்

சுப்பிரமணிய சாமியின் டிவிட்டர் பக்கத்தை முடக்கக்கோரி சென்னை கமிஷனர் ஆபிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டிவிட்டர் பக்கத்தை முடக்க கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத வன்முறையை தூண்டும் வகையில் சுப்பிரமணியசாமி டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி தொடர்ந்து தமிழர்களை சீண்டி வருகிறார். ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது தமிழர்களை பொறுக்கி என்று கூறிய அவர் தற்போது பொறுக்கி என்பதை தமிழர்களின் பொதுப் பெயராகவே வைத்துள்ளார்.

Complaint to police commissioner to disable Subramaniya samy's twitter account

நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதிலும் தமிழர்களை பொறுக்கி என்றே சு.சாமி குறிப்பிட்டுள்ளார். தனத டிவிட்டர் பக்கத்தில் அவர் டிவிட்டியிருப்பது, பாகிஸ்தான், ராஜஸ்தான் எல்லை பகுதி வழியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அமைப்பின் ஏஜெண்ட் 6 பேர் சென்னைக்குள் நுழைந்துள்ளனர். தமிழக பொறுக்கிகள் தான் அவர்களது இலக்கு என கூறியுள்ளார்.

சு.சாமியின் சர்ச்சைக் கருத்துகள் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் கொந்தளிப்பை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சு.சாமியின் டிவிட்டர் பக்கத்தை முடக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா இந்த புகாரை அளித்துள்ளார். டிவிட்டரில் மத வன்முறையை தூண்டும் வகையில் சுப்பிரமணியசாமி கருத்து தெரிவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Complaint has given to police commissioner to disable Subramaniya samy's twitter account. Accused that he creats religious violence through Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X