For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடாது கருப்பு... மாற்றப்பட்ட பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளர் மீதும் குவியும் புகார்கள்!

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை பாளை தொகுதி புதிய வேட்பாளர் மீதும் புகார்கள் குவிந்து வருவதால் அவர் கலங்கி போய் உள்ளார். அதிமுக வேட்பாளர் பட்டியில் வெளியான நாளில் இருந்தே அடிக்கடி மாற்றங்களும் நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பாளையங்கோட்டை வேட்பாளர் தமிழ் மகன் உசேன் மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக ஹைதர் அலி அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் மேலப்பாளையம். 7ம் வகுப்பு வரை படித்துள்ளார். மதிமகவில் பகுதி செயலாளராக இருந்த இவர் பின்னர் அதிமுகவில் இணைந்தார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆசி பெற்ற அவரும் நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளார்.

Complaints on Palayamkottai ADMK candidate

அவர் மதிமுகவில் இருந்தது உள்ளிட்ட ஆதாரங்களை சுட்டி காட்டி புகார்கள் மேலிடத்திற்கு பறந்துள்ளன. மாநகரட்சி கவுன்சில் கூட்டங்களில் மேலப்பாளையத்தில் சரிவர பணிகள் நடைபெறவில்லை என அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பழைய வேட்பாளர் தமிழ்மகன் உசேன் மதிமுக வேட்பாளரை சந்தித்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஹைதர் அலிக்கும் மதிமுகவோடு இருக்கும் நட்பு குறித்து புகைப்படத்தோடு புகார்கள் பறந்துள்ளதால் அவரும் கலக்கத்தில் உள்ளார்.

நெல்லை மாவட்டம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை நாங்கள் இருப்போமா அல்லது பந்தாடப்படுவோமா என்று பலர் புலங்கி தவித்து வருகின்றனர். நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கடந்த 5 வருடமாக தொகுதி பக்கமே எட்டி பார்க்காதவர் என்றும், எம்எல்ஏ அலுவலகத்தை திறக்காமலேயே இருந்ததாகவும குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலைமைக்கு நெருக்கமாக இருந்த தமிழ்மகன் உசேனுக்கே இந்த கதி என்றால் நாளை நம்ம கதியும் அதே தான் என இப்போதே வேட்பாளர் புலம்ப துவங்கி விட்டார். இந்த காரணத்தால் பலர் செலவு செய்யவே தயக்கம் காட்டி வருகின்றனர்.

English summary
Palayamkottai ADMK Candidate traps with discontent complaints.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X