For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாம்பரம்-நெல்லை இடையே 'அந்த்யோதயா' விரைவு ரயில் சேவை துவக்கம்.. கட்டணம் ரூ.240

தாம்பரம்-நெல்லை இடையே முன்பதிவு இல்லாத அந்த்யோதயா விரைவு ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை முன்பதிவில்லாமல் பயணிக்கும் வகையில் அந்த்யோதயா விரைவு ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டது.

தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை முன்பதிவில்லாமல் பயணிக்கும் வகையில், அந்த்யோதயா விரைவு ரயில் சென்னையில் இருந்து துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயிலை மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ராஜன் கோஹைன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

Complete Unreserved Daily Express Train from Tambaram to Nellai

தினமும் தாம்பரம் - நெல்லை வழியில் இயக்கப்படும் இந்த ரயிலில் 16 பெட்டிகள் உள்ளன. இந்த ரயிலில் பயணிகள் முன் பதிவு இல்லாமல் பயணிக்கலாம். இந்த ரயிலில் கட்டணம் ரூ.240 ஆகும்.

இந்த ரயில் பெட்டிகளில் எல்.இ.டி விளக்குகள், செல்போன் மற்றும் லேப்-டாப் சார்ஜ் செய்யும் வசதிகள் உள்ளன. மேலும் இந்த விழாவில், தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விழாவில் பங்கேற்றார்.

ரயில் விவரம்: திருநெல்வேலி-தாம்பரம் (16192) ரயில், மாலை 5.30 மணிக்கு கிளம்பி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், நெல்லைக்கு அன்று மதியம் 3.30 மணிக்கு சென்றடையும்.

English summary
Complete Unreserved Daily Express Train from Tambaram to Nellai. Central Minister for state Pon Radhakrishnan flag off Antiodaya Super fast from Tambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X